கொரோனா நான்காம் அலை: அடுத்த 40 நாட்களுக்கு இந்தியாவின் நிலை இதுதான்.. நிபுணர் குழு எச்சரிக்கை!

0

கொரோனா பாதிப்புகள் மீண்டும் தற்போது உலகமெங்கும் அதிகரித்து வருகிறது.சீனாவில் மில்லியன் கணக்கான மக்கள் BF7 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் அடுத்து வரும் 40 நாட்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா:

2019ம் ஆண்டில் இருந்து தற்போது வரை உலக மக்களின் காதுகளில் ஒலிக்கும் ஒரு பெயர் கொரோனா தான். சீனாவை தற்போது பாடாய்படுத்தி வரும் இதன் புதிய திரிபு இந்தியாவில் குஜராத் மற்றும் ஒடிசாவை சேர்ந்த 4 பேருக்கு முதன் முதலில் கண்டறியப்பட்டது. மத்திய அரசும் விமான நிலையங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில் மத்திய அரசு இந்தியாவில் அடுத்து வரும் 40 நாட்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக எச்சரித்துள்ளது. மேலும் அனைவரும் கொரோனா முன்னச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கு முன்பு கண்டறியப்பட்ட கொரோனா திரிபுகள் போன்று இல்லாமல் BF7 கொரோனா திரிபு ஒரு சமயத்தில் 16 பேருக்கு பரவும் அபாயம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசு அறிவுறுத்தியதை போல மக்கள் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, அடிக்கடி கைகளை கழுவுவது போன்ற நோய் தடுப்பு நடவடிக்கையை பின்பற்றும் போது இந்த தொற்றின் தொடர்பு சங்கிலியை முறியடித்து இந்தியாவில் நான்காம் அலை ஏற்படாமல் தடுக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!