18 வயதிற்கு உட்பட்டவர்களை தாக்கும் கொரோனா 3ம் அலை – மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!

0
18 வயதிற்கு உட்பட்டவர்களை தாக்கும் கொரோனா 3ம் அலை - மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!
18 வயதிற்கு உட்பட்டவர்களை தாக்கும் கொரோனா 3ம் அலை - மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!

18 வயதிற்கு உட்பட்டவர்களை தாக்கும் கொரோனா 3ம் அலை – மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!

கொரோனா 3வது அலையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்கள் எப்போதும் தயாராக இருக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா 3ம் அலை எச்சரிக்கை:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை முதல் அலையை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. நாள்தோறும் அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையால் மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாமல் சிரமப்பட்டனர். உயிர் காக்கும் ஆக்சிஜன் இல்லாமல் நோயாளிகள் உயிரிழக்கும் அவல நிலை தமிழகத்தில் ஏற்பட்டது. ரெம்டெசிவிர் மருந்துக்காக நோயாளிகளின் உறவினர்கள் நீண்ட வரிசையில் காத்து கிடந்தனர். மருந்து பொருட்களுக்கும் பற்றாக்குறை நிலவியது. கொரோனா இரண்டாம் அலை மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது.

ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டு பெறும் எளிய வழிமுறைகள் – தவறாமல் படிங்க!!

தற்போது தொடர் ஊரடங்கு மற்றும் விரைவுபடுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி திட்டத்தால் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையில் கொரோனா 3ம் அலை வரும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இது 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை அதிகளவு பாதிக்கும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். 3ம் அலை குழந்தைகளை தாக்கும் என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டது. மேலும் முதல் மற்றும் இரண்டாம் அலையால் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை நேற்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டது.

ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டு பெறும் எளிய வழிமுறைகள் – தவறாமல் படிங்க!!

3வது அலையை எதிர்கொள்ள குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். குழந்தைகள் நல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், ஐசியு படுக்கை வசதிகளை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள பொது மருத்துவம், மயக்கவியல் துறை மருத்துவர்களும் கொரோனாவின் 3ஆவது அலையை எதிர்கொள்ள எந்தநேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!