தமிழகத்தில் கூட்டுறவுத்துறை உதவியாளர் காலிப்பணியிடங்கள் – அமைச்சர் சொன்ன தகவல்!
தமிழகத்தில் கூட்டுறவுத்துறை உதவியாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யாதவர்களும் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு அறிவிப்பு
தமிழகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் கூட்டுறவுத் துறைகளில் தேர்வு செய்யப்பட்ட சுருக்கெழுத்து தட்டச்சர்கள் (நிலை 3) மற்றும் தட்டச்சு பணியிடங்களுக்காகப் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு 32 பேருக்கு பணிநியமன ஆணையை வழங்கினார். அப்போது பேசிய அவர் படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் எனவும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று (நவ. 17) 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்கை!
மேலும் பேசிய அவர் கூட்டுறவுத் துறையில் பணியாளர்களை தேர்வு செய்வற்கு என்றே தனிச்சட்டம் இருப்பதாகவும், அதன் அடிப்படையில் தான் பணி நியமனங்கள் ஒளிவுமறைவின்றி நடைபெறுவதாக தெரிவித்தார். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 70 லட்சம் பேர் பதிவு செய்திருந்தாலும், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யாதவர்களும் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கு எந்த தடையும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.