மாதத்தின் முதல் நாளே இப்படி ஒரு குட் நியூஸா? சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை வீழ்ச்சி!

0
மாதத்தின் முதல் நாளே இப்படி ஒரு குட் நியூஸா? சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை வீழ்ச்சி!
மாதத்தின் முதல் நாளே இப்படி ஒரு குட் நியூஸா? சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை வீழ்ச்சி!
மாதத்தின் முதல் நாளே இப்படி ஒரு குட் நியூஸா? சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை வீழ்ச்சி!

இந்தியாவில் வர்த்தக மற்றும் வீட்டு பயன்பாடு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சிலிண்டர் விலை:

இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் இருந்தே சிலிண்டர் விலை அதிகரித்து வருகிறது. அதனை தொடர்ந்து ஏற்பட்ட உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்து. அதனால் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை எதிர்பாராத அளவு உயர்ந்து பயனர்களுக்கு கடும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியது. இதன் விலையை அரசு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கு மத்தியில் மானிய விலை சிலிண்டர் பெறுபவர்களுக்கு மானியத் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதில்லை என்றும் புகார்கள் வந்தது.

இந்த நிலையில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்துள்ளதால் கடந்த சில மாதங்களாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றும் வணிக சிலிண்டர் விலை சரிந்துள்ளது. இது வணிக நிறுவன உரிமையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் அரசு நிர்ணயித்துள்ளதை தாண்டி அந்தந்த மாநில வரி விகிதங்களுக்கு ஏற்ப வணிக சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கும். அந்த வகையில் தற்போது மும்பையில் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.32.5 குறைக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளி மாணவர்களுக்கான சூப்பர் அறிவிப்பு – வெளியான உத்தரவு!

Exams Daily Mobile App Download

இதனையடுத்து ஒரு சிலிண்டர் விலை ரூ. 1,811.50க்கு விற்கப்பட்டு வருகிறது. அதே போல கொல்கத்தாவில் 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.36.5 குறைந்து ரூ.1,959 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.35.5 குறைந்து ரூ.2,009.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே நிலையில் நீடித்து வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!