புது பைக்கை பரிசளித்த “குக் வித் கோமாளி” விஜே மணிமேகலை – கணவர் வெளியிட்ட புகைப்படம்!

0
புது பைக்கை பரிசளித்த
புது பைக்கை பரிசளித்த "குக் வித் கோமாளி" விஜே மணிமேகலை - கணவர் வெளியிட்ட புகைப்படம்!
புது பைக்கை பரிசளித்த “குக் வித் கோமாளி” விஜே மணிமேகலை – கணவர் வெளியிட்ட புகைப்படம்!

விஜய் டிவி “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வரும் விஜே மணிமேகலையின் கணவர் ஹுசைனின் விலை உயர்ந்த பைக் சமீபத்தில் காணாமல் போனதை அடுத்து, நேற்று ஹுசைனின் பிறந்தநாளை அடுத்து பொம்மை பைக் ஒன்றை மணிமேகலை பரிசாக வழங்கி இருக்கிறார்.

விஜே மணிமேகலையின் பரிசு:

சன் மியூசிக் சேனலில் ஆங்கராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது விஜய் டிவியில் டாப் ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் கலக்கி வருபவர் விஜே மணிமேகலை. அவர் சில ஆண்டுகளுக்கு முன் ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் வந்த நிலையில் தனியாக பல கஷ்டங்களை தாண்டி வாழ்ந்து தற்போது சின்னத்திரையில் தனக்கொரு இடத்தை பிடித்திருக்கிறார். மணிமேகலை சமீபத்தில் BMW கார் வாங்கி இருந்தார்.

Exams Daily Mobile App Download

அவருடைய கணவர் ஹுசைன் ஒரு நடன இயக்குனர். லாரன்ஸ் உடன் பல படங்களில் அவர் நடித்திருக்கிறார். இந்நிலையில் மணிமேகலை அவருடைய கணவர் ஹுசைன் உடன் இணைந்து தனியாக யூடுயூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் ஏகப்பட்ட வீடியோக்களை அவர் பதிவிட்டு வரும் நிலையில் சமீபத்தில் தன்னுடைய கணவரின் விலை உயர்ந்த KTM பைக்கை திருடர்கள் திருடிவிட்டதாக பதிவிட்டிருந்தார். மேலும் பைக் திருடன் CCTV வீடியோவையும் வெளியிட்டார்.

பிறந்தநாள் விழாவில் கோபியை பார்த்த ராதிகா, மாட்டிக் கொண்ட கோபி – “பாக்கியலட்சுமி” சீரியலில் இனி வருபவை!

இந்நிலையில் அது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நேற்று மணிமேகலையின் கணவர் ஹுசைனின் பிறந்தநாள் என்பதால் அது குறித்து வாழ்த்து தெரிவித்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதன் பின் மணிமேகலை தனது கணவருக்கு பொம்மை பைக் ஒன்றை பரிசளித்து இருக்கிறார். அது குறித்த புகைப்படத்தை ஹுசைன் வெளியிட்டு இருக்கிறார். மேலும் ஏற்கனவே பைக்கை தொலைத்ததால் மணிமேகலை ஹுசைனை பழி வாங்க பல வேலைகளை செய்ய சொல்வது போல வீடியோ ஒன்றும் வெளியாகி இருந்தது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!