“குக் வித் கோமாளி” சீசன் 3 வைல்ட் கார்ட் என்ட்ரியாக வரும் “பாக்கியலட்சுமி” ஜெனி – ரசிகர்கள் உற்சாகம்!

0
"குக் வித் கோமாளி" சீசன் 3 வைல்ட் கார்ட் என்ட்ரியாக வரும் "பாக்கியலட்சுமி" ஜெனி - ரசிகர்கள் உற்சாகம்!
“குக் வித் கோமாளி” சீசன் 3 வைல்ட் கார்ட் என்ட்ரியாக வரும் “பாக்கியலட்சுமி” ஜெனி – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை திவ்யா கணேஷ் “குக் வித் கோமாளி சீசன் 3” நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வருவாரா என்ற கேள்விக்கு விளக்கம் அளித்து இருக்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவின் மருமகளாக ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை திவ்யா கணேஷ். அவர் இதற்கு முன்னதாக சன் டிவி சுமங்கலி சீரியலில் அனு கதாபாத்திரத்தில் நடித்தவர். பல சீரியல்களில் அவர் நடித்திருந்தாலும் பாக்கியலட்சுமி ஜெனி கதாபாத்திரம் தான் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தது. இந்த சீரியலில் அவர் பாக்கியாவிற்கு ஆதரவாக இருப்பதால் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். பாக்கியாவின் தொழில் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக ஜெனி தான் இருக்கிறார்.

தமிழகத்தில் மார்ச் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் திவ்யா கணேஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வருகிறார். அதில் ரசிகர் ஒருவர் உங்களுக்கு சமைக்க தெரியுமா என கேட்டதற்கு ஒரு அளவிற்கு சமைக்க தெரியும் என பதில் அளித்து இருக்கிறார். மேலும் அப்போ குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போவீங்களா என கேட்டதற்கு அந்த நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி கூப்பிட்டால் போவேன் என பதில் அளித்து இருக்கிறார்.

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 3% உயர்வு – மாநில அரசு அறிவிப்பு!

குக் வித் கோமாளி சீசன் 3ல் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக போவீங்களா என கேட்டதற்கு ஆமாம் இல்லை என பதில் கொடுக்காமல் தலையை ஆட்டுவது போல பதில் கொடுத்து இருக்கிறார். அதனால் அவர் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக வர வாய்ப்புள்ளது என தெரிகிறது. மேலும் குக் வித் கோமாளி சீசன் 3 முதல் இரண்டு சீசன்களை போலவே வெற்றி அடையும் என்பதில் சந்தேகமே இல்லை என கடந்த வாரங்களில் ஒளிபரப்பான எபிசோடுகள் மூலம் உறுதியாக தெரிகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!