ரோஷினி, அம்மு அபிராமி & மனோபாலாவுடன் துவங்கும் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 – ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ சீசன் 3யின் ப்ரோமோ இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக இருப்பதாக தகவல்கள் பெறப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
குக் வித் கோமாளி
தமிழக மக்களின் பேராதரவுடன் தற்போது 3வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ள ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் ஒளிபரப்பு இன்னும் ஒரு சில நாட்களில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. விஜய் டிவியில் கடந்த 2 சீசன்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டு சூப்பர் ஹிட் கொடுத்திருந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் சீசன் 3 இன்னும் அதிரடியான, அட்டகாசமான போட்டியாளர்களுடன் களம் காண இருக்கிறது. அந்த வகையில் இதுவரை ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ல் கலந்து கொள்ளப்போகிறவர்கள் என்று சில பிரபலங்களின் பெயர்கள் சமூக வலைதளங்களில் அடிபட்ட வண்ணம் இருந்தது.
இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக ‘குக் வித் கோமாளி’ சீசன் 3க்கான போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளின் பெயர்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வகையில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் குக் ஆக மனோபாலா, ‘அசுரன்’ அம்மு அபிராமி, ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை ரோஷினி ஹரிப்ரியன், நடிகை வித்யூலேகா, கானா பாடகர் அந்தோணி தாஸ், கிரேஸ், ‘சார்பட்டா பரம்பரை’ நடிகர் சந்தோஷ், ‘கனா’ திரைப்பட நடிகர் தர்ஷன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
தவிர இந்த மொத்த ஷோவுக்கும் தூணாக கருதப்படும் கோமாளிகளில் இம்முறை பாலா, ஷக்தி, குரேஷி, மணிமேகலை, ஷிவாங்கி, சுனிதா ஆகியோருடன் ‘சூப்பர் சிங்கர்’ பரத், மூக்குத்தி முருகன் ஆகியோர் புதிய கோமாளிகளாக அறிமுகமாகிறார்கள். குறிப்பாக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த கோமாளி புகழ், இந்த சீஸனின் ஆரம்ப கட்ட எபிசோடுகளில் கலந்து கொள்ள மாட்டார் என்று சொல்லப்பட்டுள்ளது. அதே போல இம்முறையும் ரக்ஷன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து .வழங்க இருக்கிறார்.
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!
இப்போது ‘குக் வித் கோமாளி’ சீசன் 3க்கான முதல் ப்ரோமோவில் நடிகை வித்யூலேகாவுக்கு கோமாளியாக மூக்குத்தி முருகன், அந்தோணி தாஸுக்கு கோமாளியாக பரத், தர்ஷனுக்கு கோமாளியாக சுனிதா, மனோபாலாவுக்கு கோமாளியாக பாலா என சூப்பர் காம்போவுடன் இந்த சீசன் துவங்க இருக்கிறது. இதற்கிடையில் இன்னும் ஒரு சில நாட்களில் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3க்கான முதல் அதிகாரப்பூர்வ ப்ரோமோ வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.