விஜய் & சூர்யாவுடன் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 அம்மு அபிராமி – ஷாக்கிங் தகவல்! ரசிகர்கள் உற்சாகம்!

0
விஜய் & சூர்யாவுடன் 'குக் வித் கோமாளி' சீசன் 3 அம்மு அபிராமி - ஷாக்கிங் தகவல்! ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் & சூர்யாவுடன் 'குக் வித் கோமாளி' சீசன் 3 அம்மு அபிராமி - ஷாக்கிங் தகவல்! ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் & சூர்யாவுடன் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 அம்மு அபிராமி – ஷாக்கிங் தகவல்! ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களின் இதயங்களை கவர்ந்திருக்கும் நடிகை அம்மு அபிராமி. இவர் நடிகர் விஜய், சூர்யா, கார்த்தி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கும் தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அம்மு அபிராமி

தமிழ் சினிமாவில் ‘ராட்சசன்’ என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அம்மு அபிராமி. இந்த திரைப்படத்தில் இவரது கதாப்பாத்திரம் ரசிகர்களால் பேசும்படியாக அமைந்திருக்க, தொடர்ந்து இயக்குனர் வெற்றி மாறனின் இயக்கத்தில் உருவான ‘அசுரன்’ என்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடி போட்டிருக்கிறார் அம்மு. தொடர்ந்து சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த அம்மு அபிராமி தற்போது விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டு வருகிறார்.

ஜீ தமிழின் ‘என்றென்றும் புன்னகை’ சீரியலில் நடக்கும் அதிரடி மாற்றம் – ஹீரோவாக இவரா? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

இதுவரை சினிமாவில் ஒரு கதாப்பாத்திரமாக மட்டுமே நடிகை அம்மு அபிராமியை ரசித்திருந்த ரசிகர்கள், அவரது உண்மையான குணம், பேசிப் பழகும் விதம், நடவடிக்கை என அனைத்தையும் ‘குக் வித் கோமாளி’ ஷோவில் பார்த்து அவரை ரீசன்ட் க்ரஷ் ஆக மாற்றி கொண்டுள்ளனர். இப்படி ஏகப்பட்ட வரவேற்புகளை பெற்றிருக்கும் நடிகை அம்மு அபிராமி, ஒரு பக்கா சென்னை பெண். இவர் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். இவருக்கு பெயிண்டிங் செய்வது மிகவும் பிடிக்குமாம். தற்போது 21 வயதாகி இருக்கும் அம்மு அபிராமியின் அப்பா சினிமாவில் ஒரு சவுண்ட் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.

தமிழகத்தில் தேர்தலுக்கு பிறகு மீண்டும் முழு ஊரடங்கு அமல்? விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

சினிமாவுக்காக தனது பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திய அம்மு அபிராமி தற்போது பிரைவேட்டாக கல்வி கற்று வருகிறாராம். இவர் சினிமாவில் அறிமுகமானது ‘ராட்சசன்’ திரைப்படம் என்ற தகவல் நம் எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் இவர் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்னால், நடிகர் விஜயின் ‘பைரவா’ திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷுடன் காலேஜில் படிக்கும் பெண்ணாக நடித்திருக்கிறாராம். அதே போல நடிகர் சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் வளர்க்கும் பெண்களில் ஒருவராக இவர் நடித்திருக்கிறார்.

தொடர்ந்து ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படத்தில் நடிகர் கார்த்தியின் தங்கையாகவும், ‘என் ஆளோட செருப்பை காணோம்’ திரைப்படத்தில் கயல் ஆனந்தியின் தோழியாகவும் இவர் நடித்திருக்கிறார். மேலும் அசுரன் மற்றும் ராட்சசன் திரைப்படங்களின் தெலுங்கு பதிப்பிலும் இவர் நடித்திருக்கிறார். தவிர தம்பி, துப்பாக்கி முனை, நவராசா போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கும் அம்மு தற்போது ‘யானை’ என்ற திரைப்படத்தில் நடிகர் அருண் விஜயுடனும், கண்ணகி என்ற புதிய திரைப்படம் ஒன்றிலும் நடித்து வருகிறாராம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!