வருங்கால மனைவியுடன் ரம்ஜான் பண்டிகை கொண்டாடிய ‘குக் வித் கோமாளி’ புகழ் – வைரலாகும் பதிவு! ரசிகர்கள் வாழ்த்து!

0
வருங்கால மனைவியுடன் ரம்ஜான் பண்டிகை கொண்டாடிய 'குக் வித் கோமாளி' புகழ் - வைரலாகும் பதிவு! ரசிகர்கள் வாழ்த்து!
வருங்கால மனைவியுடன் ரம்ஜான் பண்டிகை கொண்டாடிய 'குக் வித் கோமாளி' புகழ் - வைரலாகும் பதிவு! ரசிகர்கள் வாழ்த்து!
வருங்கால மனைவியுடன் ரம்ஜான் பண்டிகை கொண்டாடிய ‘குக் வித் கோமாளி’ புகழ் – வைரலாகும் பதிவு! ரசிகர்கள் வாழ்த்து!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் தனது காதலியுடன் சேர்ந்து இந்த ஆண்டு ரம்ஜானை கொண்டாடும் படியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி புகழ்:

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் இன்று ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அனைத்து திரை பிரபலங்களுமே ரம்ஜான் வாழ்த்துக்களை ரசிகர்களுக்கு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான புகழும் தொழுவது போன்ற ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, அனைவருக்கும் ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள் என ரசிகர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

TN Job “FB  Group” Join Now

கூடிய சீக்கிரத்திலேயே புகழ் தனது காதலியையும் மணமுடிக்க இருக்கிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாகவே புகழுக்கு ஏகப்பட்ட திரைப்பட வாய்ப்புகள் வந்து குவிந்து கொண்டிருந்தன. சமீபத்தில் கூட வலிமை திரைபடத்தில் புகழ் நடித்திருந்தார். இது மட்டுமல்லாமல் பல முன்னணி நடிகர்களுடன் நடிக்க புகழுக்கு வாய்ப்பு கிடைத்து வருகிறது. முழுக்க முழுக்க புகழால் மட்டுமே குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் மக்களின் மத்தியில் வைரலாகி வந்தது. ஆரம்பத்தில் புகழ், திரைப்பட வாய்ப்பின் காரணமாக குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

தமிழக ரேஷன் கார்டு வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – அரசின் ஹாப்பி நியூஸ்!

புகழ் இல்லாமல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியே செயலிழந்து காணப்பட்டதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து, மீண்டும் புகழை குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வர வற்புறுத்தினர். ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி மீண்டும் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் புகழ் கலந்து கொண்டார். தற்போது புகழ் ரம்ஜானை தனது காதலியுடன் கொண்டாடி வருகிறார் மற்றும் இவர் தொழுகும் படியாக வெளியிட்ட புகைப்படத்தை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!