7 வருடமாக குழந்தையின்றி தவித்த ‘குக் வித் கோமாளி’ செப் வெங்கடேஷ் பட் – ரசிகர்கள் உருக்கம்!

0
7 வருடமாக குழந்தையின்றி தவித்த 'குக் வித் கோமாளி' செப் வெங்கடேஷ் பட் - ரசிகர்கள் உருக்கம்!
7 வருடமாக குழந்தையின்றி தவித்த 'குக் வித் கோமாளி' செப் வெங்கடேஷ் பட் - ரசிகர்கள் உருக்கம்!
7 வருடமாக குழந்தையின்றி தவித்த ‘குக் வித் கோமாளி’ செப் வெங்கடேஷ் பட் – ரசிகர்கள் உருக்கம்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியால் பயனடைந்தவர்கள் குறித்து வெங்கடேஷ் கடந்த வாரம் கூறியிருந்த நிலையில் அதனை கேலிசெய்து நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வந்தனர். இதற்கு தக்க பதிலடி பதிவு ஒன்றை வெங்கடேஷ் பட் வெளியிட்டுள்ளார்.

குக் வித் கோமாளி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளிலேயே ரசிகர்களின் அதிகமான ஆதரவைப் பெற்ற நிகழ்ச்சி என்றால் அது நிச்சயமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான். கடந்த ஒரு வார காலமாகமாகவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியை நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் கிரியேட் செய்து ஷேர் செய்து வருகின்றனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாகவே பலரும் தங்களது கஷ்டங்களை மறந்து வயிறு குலுங்க சிரித்து வருகின்றனர். அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியால் பயனடைந்தவர்கள் குறித்து நிகழ்ச்சியின் போது வெங்கடேஷ் பட் கூறியிருந்தார்.

விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – செல்வத்தை கையும் களவுமாக பிடித்த சந்தியா!

அதாவது கடந்த எட்டு வருடங்களாக குழந்தை இல்லாமல் ஒரு தம்பதியினர் சிகிச்சை எடுத்து வந்து இருக்கின்றனர். ஆனாலும் தங்களுக்கு குழந்தை இல்லையே என்கிற மன உளைச்சலில் இருந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஒரு ஆண்டுகளாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியினை இந்த தம்பதியினர் கண்டு ரசித்து இந்த நிகழ்ச்சியால் நிம்மதி அடைந்து தற்போது குழந்தையையும் பெற்றெடுத்துள்ளனர் என்கிற செய்தியை வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின்போது கூறியிருக்கிறார்.

Exams Daily Mobile App Download

இதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து விட்டாலே குழந்தை பிறந்து விடுமா என நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து மீம்ஸ் கிரியேட் செய்து வருகின்றனர். இதற்கு வெங்கடேஷ் தகுந்த பதில் ஒன்றை கூறியுள்ளார். இது போன்ற மீம்களை பார்க்கும்போது இந்த உலகத்தில் மனித நேயம் என்ற ஒன்று கிடையவே கிடையாதா என தோன்றுகிறது. குழந்தை செல்வம் உள்ளவர்களுக்கே தெரியும் குழந்தை என்பது எவ்வளவு பெரிய பாக்கியம் என்று. எனக்கும் திருமணம் முடிந்து ஏழு ஆண்டுகளுக்கு குழந்தை இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன். ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு வருடங்களாய் நாங்கள் உணர்ந்து இருக்கிறோம். குழந்தை இல்லாதவர்களுக்கு மட்டுமே அந்த வலி புரியும். எனவே இது போன்ற மீம்களை ஷேர் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here