பாரதி கண்ணம்மா ரோஷினியுடன் இணைந்த ‘குக் வித் கோமாளி’ புகழ் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

0
பாரதி கண்ணம்மா ரோஷினியுடன் இணைந்த 'குக் வித் கோமாளி' புகழ் - ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!
பாரதி கண்ணம்மா ரோஷினியுடன் இணைந்த 'குக் வித் கோமாளி' புகழ் - ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!
பாரதி கண்ணம்மா ரோஷினியுடன் இணைந்த ‘குக் வித் கோமாளி’ புகழ் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சியான “குக் வித் கோமாளி” சீசன் 3-ல் இந்த வார எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இந்த புதிய ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்று வரும் நிலையில், ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

குக் வித் கோமாளி சீசன் 3 ப்ரோமோ:

குக் வித் கோமாளி சீசன் 3 சில வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி தற்போது சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த 2 வாரங்களாக புகழ் வராமல் இருந்ததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். மேலும் சென்ற வார எபிசோடில் நடிகர் துல்கர் சல்மான் வந்திருந்தார். இந்நிலையில் இந்த வாரம் யார் வருவார் நிகழ்ச்சி எப்படி இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பின் படி இந்த வாரம் புகழ் வரப் போகிறார்.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர், நடிகைகள் பெறும் ஒருநாள் சம்பளம் – ரசிகர்கள் ஷாக்!

அதனால் நினைத்ததை விட ஆட்டம் களைகட்ட இருக்கிறது. இந்த வாரம் புதிதாக ஓரு பொருள் கொடுத்து டாஸ்க் செய்ய இருக்கின்றனர். அதாவது அவகேடா கொடுத்து அதில் புதுவிதமான உணவுகளை சமைக்க வேண்டும் என்பதே டாஸ்காக இருக்கிறது. அதில் புகழ் வேற இருப்பதால் நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லாமல் இந்த வார எபிசோட் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்நிலையில் இந்த வார எபிசோட் பார்க்கவே உற்சாகமாக இருக்கிறது.

புகழ் வந்தாலே நிகழ்ச்சி களைகட்டும் என்றாலும் அனைத்து கோமாளிகளும் தங்களுடைய பங்களிப்பை கொடுத்து வருகின்றனர். மேலும் சமையல் செய்யும் போட்டியாளர்களும் இதுவரை கேள்விப்படாத பல டிஷ்களை சமைத்து வருகின்றனர்.அதனால் இந்த சீசனும் கடந்த 2 சீசன்களை போல வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் இந்த வார எபிசோட் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சி காமெடி நிகழ்ச்சியாக இருந்தாலும் பல சர்ச்சைகள் வருகின்றனர். ஆனாலும் ஒரு பக்கம் மக்களின் விருப்பமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக இது இருப்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here