அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் ‘குக் வித் கோமாளி சீசன் 3’ – கடுப்பான ரசிகர்கள்!

0
அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் 'குக் வித் கோமாளி சீசன் 3' - கடுப்பான ரசிகர்கள்!
அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் 'குக் வித் கோமாளி சீசன் 3' - கடுப்பான ரசிகர்கள்!
அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் ‘குக் வித் கோமாளி சீசன் 3’ – கடுப்பான ரசிகர்கள்!

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி அதிக அளவிலான ரசிகர்களின் ஆதரவை பெற்ற நிகழ்ச்சியாக உள்ள போதிலும், சமீப காலமாக ரசிகர்களின் அதிருப்தியை பெற்று வருகிறது.

குக் வித் கோமாளி:

விஜய் டிவியின் குக் கோமாளி நிகழ்ச்சி என்றவுடன் அதன் கலகலப்பு தான் அனைவரின் நினைவிற்கும் வரும். தற்போது புதிதாக குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில் புதிய கோமாளியாக வந்துள்ள சூப்பர் சிங்கர் பரத் வரும் அனைத்து பெண் போட்டியாளர்களிடமும் காமெடி செய்து கொண்டு இருந்தார். இதனால் செஃப் பட் சார் பரத்தை விரட்டி அடிப்பது போல் காட்சிகள் வந்தது.

EPFO கணக்கு வைத்துள்ளவர்கள் கவனத்திற்கு – வரிச்சலுகை குறித்த விவரம் இதோ!

இதனால் முதல் வாரத்திலேயே கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. உடனே பட் அவர்கள் இதற்கு தனது சமூக வலைப்பக்கத்தில் பதில் அளித்திருந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடப்பது அனைத்தும் மக்களை மகிழ்விப்பதற்காக மட்டும் தான் என்றும் இதை வெறும் நிகழ்ச்சியாக மட்டும் பார்க்கும் படியும் கூறினார். அடுத்த வாரத்தில் அதிர்ச்சி அருணை செஃப் தாமு அவர்கள் மிரட்டுவது போல் வந்தது.பின்னர் இது அவரை பயமுறுத்துவதற்காக செய்யப்பட்டது என்று அறிவிக்கப்பட்டது.

மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – வலுக்கும் போராட்டம்! அரசு எடுக்கப்போகும் முடிவு?

இதற்கும் தற்போது ரசிகர்கள் நெகட்டிவ் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இதனால் கோவமடைந்த பட் அவர்கள் நிஜமான அக்கறையோடு பேசுபவர்களுக்கு மட்டும் பதில் அளித்தால் போதும், சும்மா நெகட்டிவ் கருத்துக்களை பரப்புபவர்களுக்கு தான் இனி எந்த பதிலும் அளிக்க போவதில்லை என்று தனது சமீபத்திய பதிவில் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்களின் மிகவும் விருப்பமான குக் வித் கோமாளி நிகழ்ச்சி குறித்து சலசலப்பு எழுந்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!