பிரம்மாண்டமாக பிறந்தநாளை கொண்டாடிய “குக் வித் கோமாளி” ஷிவாங்கி – வைரலாகும் வீடியோ!

0
பிரம்மாண்டமாக பிறந்தநாளை கொண்டாடிய
பிரம்மாண்டமாக பிறந்தநாளை கொண்டாடிய "குக் வித் கோமாளி'' ஷிவாங்கி - வைரலாகும் வீடியோ!
பிரம்மாண்டமாக பிறந்தநாளை கொண்டாடிய “குக் வித் கோமாளி” ஷிவாங்கி – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வரும் ஷிவாங்கிக்கு நேற்று பிறந்தநாள். அவருடைய பிறந்தநாள் பிரமாண்டமாய் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

குக் வித் கோமாளி ஷிவாங்கி:

விஜய் டிவியில் தன்னுடைய திறமையை காட்ட வந்த ஷிவாங்கி தற்போது தமிழக மக்களின் செல்லப்பிள்ளையாக இருக்கிறார். இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்று சீசன்களின் வெற்றிக்கு ஷிவாங்கியின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது. இந்நிலையில் ஷிவாங்கிக்கு நேற்று 22 வது பிறந்தநாள் அவருக்கு ஏகப்பட்ட பிரபலங்கள் சமூக வலைத்தளம் மூலமாக வாழ்த்துக்களை சொல்லி இருக்கின்றனர். பதிலுக்கு ஷிவாங்கி நன்றிகளை சொல்லி இருந்தார்.

விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – குற்றவாளியை தூக்கிய சந்தியா!

இந்நிலையில் கேரளாவிற்கு திருமண நிகழ்ச்சிக்காக ஷிவாங்கி குடும்பத்துடன் சென்றுள்ள நிலையில் அங்கே கேக் வெட்டி தன்னுடைய பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடி இருக்கிறார். அதில் அவருடைய அம்மா, அப்பா மற்றும் சொந்தங்கள் பலர் இருந்தனர். ஷிவாங்கி சேலையில் செம அழகாக தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அது குறித்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவர் பதிவிட்டுள்ளார்.

Exams Daily Mobile App Download

மேலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தன்னுடைய பாடல் திறமையை காட்ட வந்த ஷிவாங்கி தற்போது நடிகர் சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் நடித்து இருக்கிறார். அதில் அவருடைய நடிப்பு திறமையை பாராட்டி சிவா பல மேடைகளில் ஷிவாங்கியை பாராட்டி இருக்கிறார். அது மட்டுமில்லாமல் ஷிவாங்கியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய அண்ணன் புகழ் ஒரு அழகான புகைப்படத்தை ஷேர் செய்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது ரசிகர்களிடம் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!