‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி & மணிமேகலைக்கு நடந்த சம்பவம் – பெங்களூரு விசிட்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

0
'குக் வித் கோமாளி' ஷிவாங்கி & மணிமேகலைக்கு நடந்த சம்பவம் - பெங்களூரு விசிட்! உற்சாகத்தில் ரசிகர்கள்!
'குக் வித் கோமாளி' ஷிவாங்கி & மணிமேகலைக்கு நடந்த சம்பவம் - பெங்களூரு விசிட்! உற்சாகத்தில் ரசிகர்கள்!
‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி & மணிமேகலைக்கு நடந்த சம்பவம் – பெங்களூரு விசிட்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்குபெற்று வரும் ஷிவாங்கி மற்றும் மணிமேகலை இருவரும் தற்போது பெங்களூருவுக்கு விசிட் அடித்திருக்கும் நிலையில் அவர்களை அடையாளம் கண்ட ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுத்து உற்சாகப்படுத்திய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி

தமிழ் டிவி சேனல்களில் ஒளிபரப்பப்படும் வார இறுதி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில், பல ஆயிரக்கணக்கான ரசிகர்களின் கவனம் பெற்றுள்ள முக்கியமான ஒரு ஷோ ‘குக் வித் கோமாளி’. விஜய் டிவியில் கடந்த 2 சீசன்களாக ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்திருந்த இந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி சமீபத்தில் 3வது சீசனுக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த முறை 10 கோமாளிகள் மற்றும் 10 குக்ஸ் என களம் கண்டு வரும் ‘குக் வித் கோமாளி’ ஷோவில் இருந்து இதுவரை ராகுல் தாத்தா மட்டும் வெளியேறி இருக்கிறார்.

விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் அடுத்த ட்விஸ்ட் – கோதையின் இறுதி நிமிடங்கள்!

இதற்கிடையில் இந்த நிகழ்ச்சி துவங்கி ஒரு சில வாரங்களே கடந்திருக்கும் நிலையில், இதற்கு மக்கள் மத்தியில் இருந்து ஏகப்பட்ட வரவேற்புகள் கிடைத்திருக்கிறது. வழக்கம் போல இந்த சீசனிலும் ரசிகர்களின் பேவரைட் ஆன கோமாளிகள் ஷிவாங்கி, புகழ், பாலா, மணிமேகலை, சுனிதா என அனைவரும் கலாட்டாக்களை அரங்கேற்றி வர, ஷோ சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகி வருகிறது. என்றாலும் படப்பிடிப்பு காரணமாக ஷிவாங்கி மற்றும் புகழ் இருவரால் அவ்வப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை.

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் சீசன் 2வில் களமிறங்கும் நடிகை நதியா – ப்ரோமோ ரிலீஸ்!

இப்படி இருக்க சினிமா, ‘குக் வித் கோமாளி’ ஷோவில் இருந்து கிடைத்த பிரேக்கில் ஷிவாங்கி, மணிமேகலை மற்றும் அவரது கணவர் ஹுசைன் மூவரும் சேர்ந்து பெங்களூருவில் உற்சாகமாக பொழுதை கழித்து வருகின்றனர். அந்த வகையில் தற்சமயம் பெங்களூருவில் உள்ள ஃபுட் ஸ்ட்ரீட் கார்னரில் ஷிவாங்கி மற்றும் மணிமேகலையை கண்டுள்ள ரசிகர்கள் அந்த ஆரவாரத்தில், புகைப்படங்களை எடுத்து கொண்டு இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இவர்கள் மூவரும், மணிமேகலையின் BMW காரில் ஒரு லாங் டிரைவ் சென்றுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here