‘குக் வித் கோமாளி’ இல் என்ட்ரி கொடுத்த புகழை எட்டி உதைத்த வெங்கடேஷ் பட் – ரசிகர்கள் அதிர்ச்சி!

0
'குக் வித் கோமாளி' இல் என்ட்ரி கொடுத்த புகழை எட்டி உதைத்த வெங்கடேஷ் பட் - ரசிகர்கள் அதிர்ச்சி!
'குக் வித் கோமாளி' இல் என்ட்ரி கொடுத்த புகழை எட்டி உதைத்த வெங்கடேஷ் பட் - ரசிகர்கள் அதிர்ச்சி!
‘குக் வித் கோமாளி’ இல் என்ட்ரி கொடுத்த புகழை எட்டி உதைத்த வெங்கடேஷ் பட் – ரசிகர்கள் அதிர்ச்சி!

விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த புகழ், கோமாளியாக மாஸ் என்ட்ரி கொடுத்துள்ள வீடியோ ப்ரோமோவாக வெளியாகி எக்கச்சக்க வரவேற்புகளை பெற்று வருகிறது. இந்த ப்ரோமோ தற்போது வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி

நீண்ட நாட்களாக தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் பேராவலுடன் எதிர்பார்த்து வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி கடந்த வாரத்தில் பிரமாண்டமாக துவங்கப்பட்டது. வழக்கம் போல கலகலப்பாக ஆரம்பித்த இந்த ஷோவின் லான்ச் எபிசோடு மக்கள் மத்தியில் இருந்து வரவேற்புகளை பெற்றிருக்கிறது. இதனுடன் இந்த ஷோவில் நடந்த சில சம்பவங்கள் சமூக வலைதளங்களில் கேள்விகளையும், விமர்சனங்களையும் உருவாக்க அதற்கு சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து விளக்கமும் கொடுக்கப்பட்டது. என்றாலும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மீதான ஆர்வம் ரசிகர்களுக்கு குறைந்தபாடில்லை.

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் இருந்து மீண்டும் விலகிய முக்கிய கதாபாத்திரம் – ரசிகர்கள் ஷாக்!

அந்த வகையில் இன்றைய வாரத்திற்கான ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 ப்ரோமோ ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்புகளை பெற்று வருகிறது. அதாவது ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் மக்களின் பேவரைட் ஆன புகழ் இந்த வார எபிசோடில் இருந்து கோமாளியாக கலந்து கொள்ள இருக்கிறார். அதாவது, ‘குக் வித் கோமாளி’ சீசன் 2 முடிந்ததும் பல திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆன புகழ், சீசன் 3ல் கலந்து கொள்ளுவாரா என்று கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தது. அதே போல, சீசன் 3க்கான முதல் ப்ரோமோவில் கூட புகழ் கலந்து கொள்ளவில்லை. தொடர்ந்து ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ன் லான்ச் எபிசோடிலும் புகழ் இல்லை.

அப்பாவிடம் உதவி கேட்ட மீனா, அலுவலகத்தில் காத்திருக்கும் மூர்த்தி ஜீவா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

இதனால் அவர் சீசன் 3ல் கலந்து கொள்வாரா என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், அதனை பூர்த்தி செய்யும் விதமாக இந்த வார ‘குக் வித் கோமாளி’ ஷோவில் புகழ் கோமாளியாக மீண்டும் களமிறங்கி இருக்கிறார். அந்த வகையில் உங்களின் பேவரைட் கோமாளி புகழ் என்று மாஸ் என்ட்ரி கொடுத்த ப்ரோமோ வீடியோ எக்கச்சக்கமான லைக்குகளை குவித்து வருகிறது. வழக்கம் போல புகழ் வந்ததும், செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க, செஃப் பட் அவரை எட்டி உதைப்பது போல சில கலகலப்பான காட்சிகள் இடம்பிடித்திருந்தது. இந்த காட்சிகளை கண்டு கழித்த ரசிகர்கள் எக்கச்சக்கமான கலாட்டாக்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!