காதலி & திருமணம் குறித்து மனம் திறந்த ‘குக் வித் கோமாளி’ புகழ் – ரசிகர்கள் உற்சாகம்!

0
காதலி & திருமணம் குறித்து மனம் திறந்த 'குக் வித் கோமாளி' புகழ் - ரசிகர்கள் உற்சாகம்!
காதலி & திருமணம் குறித்து மனம் திறந்த 'குக் வித் கோமாளி' புகழ் - ரசிகர்கள் உற்சாகம்!
காதலி & திருமணம் குறித்து மனம் திறந்த ‘குக் வித் கோமாளி’ புகழ் – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ல் சமீபத்தில் கோமாளியாக களமிறங்கி இருக்கும் புகழ், இன்றைய எபிசோடில் தனது காதல் மற்றும் திருமணம் குறித்த சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள அந்த வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி புகழ்

மக்களின் பேராதரவுடன் தற்போது 3வது சீசனுக்குள் அடியெடுத்து வைத்திருக்கும் ‘குக் வித் கோமாளி’ ஷோ வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் டிவியில் ஏற்கனவே 2 சீசன்களாக ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த ‘குக் வித் கோமாளி’ ஷோ சுமார் 8 மாத கால இடைவெளிக்கு பின்னர் மீண்டுமாக துவங்கி இருக்கிறது. ஆரம்பம் முதலே சில சர்ச்சைகளில் சிக்கி வந்த இந்த ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ல் தற்போது 10 கோமாளிகள் மற்றும் 10 குக்குகள் இடம்பிடித்துள்ளனர். இதில் மக்களின் பேவரைட் கோமாளியான புகழ், ‘குக் வித் கோமாளி’ அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

டாக்டர் மீது பாசத்தை கொட்டும் இனியா, தாத்தாவிற்கு செய்வதை சொல்லி காட்டும் செழியன் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

ஆனால் அதற்கு அடுத்த வாரங்களில் இருந்து கோமாளியாக களமிறங்கி இருக்கும் புகழ் வழக்கம் போல மக்களிடம் இருந்து வரவேற்புகளை பெற்று வருகிறார். இந்நிலையில் இன்றைய ‘குக் வித் கோமாளி’ எபிசோடில் புகழ் தனது காதலி மற்றும் திருமணம் குறித்த சில விஷயங்களை பகிர அந்த வீடியோ வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது, ‘குக் வித் கோமாளி’ ஷோவில் இன்று காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் சில விஷயங்களை பேசிக்கொண்டிருக்க புகழின் காதல் குறித்து செஃப் வெங்கடேஷ் பட் கேள்வி கேட்கிறார்.

அதாவது, யூடியூபில் நான் பார்த்தேன். அதென்ன நீ கேக் வெட்டுவதும், ஊட்டுவதுமாக இருந்தது. அந்த வீடியோவில் தான் பம்மி, பதுங்கி இருந்த நீ என்று புகழை பார்த்து செஃப் பட் கேட்கிறார். அப்போது, நான் 5 வருடமாக காதலித்து வருகிறேன். அவர் பெயர் பென்ஸி. கோயமுத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவரை சந்தித்தேன். அப்போது நான் சிரிப்புடா ஷோவில் கலந்து கொண்டு வந்தேன். கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் கூட எனக்கு அவர் நிறைய ஆதரவு கொடுத்தார்.

பாரதியிடம் தனது அப்பா பற்றி கேட்ட லட்சுமி, உண்மையை சொல்வாரா? இன்றைய எபிசோட்!

மேலும் ‘குக் வித் கோமாளி’ ஷோவில் பவித்ரா, தர்ஷா கூட அப்படி நடந்தது அவர்களுக்கு தெரியும். இது நன்றாக இருக்கிறது என்று அவர்கள் எனக்கு நிறைய சப்போர்ட் செய்திருக்கிறார்கள் என்று உற்சாகமாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த வருடத்தில் புகழ் தனது காதலியை திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு வருவதாகவும் அந்த ஷோவில் குறிப்பிட்டுள்ளார். இந்த விஷயத்தை அறிந்ததும் ‘குக் வித் கோமாளி’ ஷோவில் உள்ள கோமாளிகள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்கள் சொல்ல, ரசிகர்களும் வலைதளங்கள் மூலமாக புகழுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!