விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ல் புகழ் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

0
விஜய் டிவி 'குக் வித் கோமாளி' சீசன் 3ல் புகழ் - ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி 'குக் வித் கோமாளி' சீசன் 3ல் புகழ் - ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ல் புகழ் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ல் முதல் போட்டி ஆரம்பமாகி இருக்கும் நிலையில் ஒவ்வொரு கோமாளிகளும் போட்டியாளர்களுடன் ஜோடி போட, கலகலப்பான டாஸ்குகளுடன் புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

குக் வித் கோமாளி

கடந்த 2 வாரங்களாக ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து ஏகப்பட்ட வரவேற்புகளுடன், விமர்சனங்களையும் சம்பாதித்து வருகிறது. இம்முறை ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ல் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் இருந்து 10 போட்டியாளர்கள் குக் ஆக இடம்பெற பரத், மூக்குத்தி முருகன், ஸ்ரீதல், அதிர்ச்சி அருண் ஆகியோர் புதிய கோமாளிகளாக கலந்து கொண்டுள்ளனர். இவர்களுடன் பழைய கோமாளிகளான மணிமேகலை, ஷிவாங்கி, பாலா ஆகியோர் வழக்கம் போல நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு சென்றனர்.

‘பிக் பாஸ்’ தாடி பாலாஜியை கிழித்தெடுத்த மகள், புகார் அளிக்கும் மனைவி நித்யா – வைரலாகும் வீடியோ!

இருந்தாலும், ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ன் லான்ச் எபிசோடில் கோமாளி பரத் மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் இடையே நடைபெற்ற சில விஷயங்கள் சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பி தற்போது ஓய்ந்திருக்கிறது. இந்த சலசலப்பிற்கு மத்தியில் இந்த வாரம் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் மக்களின் மனம் கவர்ந்த புகழ் மீண்டும் கோமாளியாக களமிறங்கி இருக்கிறார். இது தொடர்பான ப்ரோமோ ஒன்று சமீபத்தில் வெளியாகி எக்கச்சக்கமான பார்வையாளர்களை கவர்ந்திருந்தது.

இதை தொடர்ந்து ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ன் முதல் போட்டி சுற்று இந்த வாரத்துடன் ஆரம்பமாகி இருக்கிறது. இதில் வழக்கமான பேரிங் பகுதியில், புகழ் – தர்ஷன், சுனிதா – ரோஷினி, மணிமேகலை – ராகுல் தாத்தா, குரேஷி – அந்தோணி தாஸ், அருண் – அம்மு அபிராமி, ஷக்தி – வித்யூலேகா, முருகன் – மனோபாலா, பாலா – ஸ்ருத்திகா, ஸ்ரீதல் – சந்தோஷ், பரத் – கிரேஸ் ஆகியோர் ஜோடிகளாக இணைந்துள்ளனர். இந்த எபிசோடில் ஷிவாங்கி கலந்து கொள்ளவில்லை.

‘பூவே உனக்காக’ சீரியலில் இருந்து விலகும் பூவரசி – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இப்போது முதல் டாஸ்கில் போட்டியாளர்களுக்கு கண் தெரியாத வகையில் கண்ணாடி ஒன்று கொடுக்கப்பட்டு, ஒரு அட்டைக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இப்போது சமையல் ஆரம்பித்ததும், புகழ் தனக்குரிய பாணியில் செஃப் பட் உடன் பேசி விளையாடிக் கொண்டிருக்க, மறுபக்கத்தில் ராகுல் தாத்தா திட்டியதாக சுனிதாவிடம் சொல்லி மணிமேகலை குமுறிக் கொண்டிருக்கிறார். இப்படி கலகலப்புடன் வெளியான ‘குக் வித் கோமாளி’ சீசன் 3க்கான ப்ரோமோ ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!