‘உங்களுக்கு பிடிச்சாதான் நாங்க இங்க இருக்கவே முடியும்’ – பதிலடி கொடுத்த சிவாங்கி! வைரலாகும் பதிவு!

0

‘உங்களுக்கு பிடிச்சாதான் நாங்க இங்க இருக்கவே முடியும்’ – பதிலடி கொடுத்த சிவாங்கி! வைரலாகும் பதிவு!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அதிகளவு ரசிகர்களை ஈர்த்து பிரபலமடைந்து வரும் சிவாங்கி தற்போது பயங்கர பிஸியாக வெள்ளித்திரையில் கலக்கி வருகிறார். இந்நிலையில் நெட்டிசன் எழும்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலடி கொடுத்த சிவாங்கியை மக்களும் அதிகளவு ஆதரித்து வருகின்றனர்.

குக்கு வித் கோமாளி சிவாங்கி:

விஜய் டிவியில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்காக பல தொடர்களும், பல ரியாலிட்டி ஷோக்களும் வந்த மயமாக உள்ளது. அந்த வரிசையில் முதல் இடத்தில் மக்கள் மனதில் பெருமளவு ஹிட் கொடுத்த ரியாலிட்டி பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்றால் அது குக்கு வித் கோமாளி ஷோ தான். இந்த ஷோ மூலம் பல ரசிகர் பட்டாளங்கள் குவிந்தது மட்டுமல்லாமல் பலரது வாழ்க்கையில் பல திருப்பங்களையும் இந்த ஷோ ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்லலாம். இந்த ஷோவை பொருத்த மட்டிலும் ஒரு சமையல் நிகழ்ச்சியாக கொண்டு செல்லாமல் மக்களை என்டேர்டைன் செய்வதற்காகவே சுவையோடு கலந்த நகைச்சுவையையும் சேர்த்து ஒளிபரப்பி வருகின்றனர்.

இவ்விதமாக தொடங்கப்பட்ட குக்கு வித் கோமாளி ஷோ சீசன் 1, 2, 3 என தொடர்ந்து எல்லா எபிசோடுகளும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த ஷோவில் கோமாளிகளாக வலம் வரும் பாலா, சிவாங்கி, புகழ், குறேஷி, சக்தி என பலரும் ஒவ்வொரு விதமாக மக்கள் மனதில் இடம் பிடித்து வருகின்றனர். இவற்றில் இன்னும் சிலரே அதிக வரவேற்ப்பை முதல் சீசனில் தொடங்கி இன்று வரை பெறுவது மட்டுமல்லாமல் இவர்களுக்காகவே இந்த ஷோவை பார்க்கும் ஒரு வகை ரசிகர்களையும் குவித்துள்ளார்கள். அவ்விதமாக புகழின் உச்சியிலும், மக்கள் மனதில் செல்லக்குட்டியாகவும் வளம் வருபவர் தான் சிவாங்கி.

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – வலுக்கும் கோரிக்கை!

இவர் சூப்பர் சிங்கர் ஷோவில் பாடகியாக பங்கேற்று புகழ் பெற்றதைவிட குக்கு வித் கோமாளி மூலமாகப் பெற்ற புகழுக்கு அளவே இல்லை. இவ்வாறு கோமாளியாக ஹிட் கொடுத்து வரும் சிவாங்கி எந்த குரலை வைத்து மக்களால் கலாய்க்கப்பட்டாரோ அதே குரல்தான் தற்போது மக்கள் செல்வங்களையும் குவித்துள்ளது. தற்போது திரைப்படங்களிலும் அவர் காமெடி ரோலில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் சோஷியல் மீடியாவில் படும் ஆக்டிவாக இருந்து தினமும் தவறாது ஒரு போஸ்ட்டை பதிவிட்டு வருகிறார். இப்பதிவுகளுக்கெனவே தனி ரசிகர்களும் இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக அளவு பின் தொடர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது பதிவிட்ட ஒரு பதிவின் கமெண்டில் நெட்டிசன் ஒருவர் சிவாங்கிக்கு எந்த கஷ்டமும் இல்லை என பதிவிட்டு இருந்ததற்கு சிவாங்கி பதில் அளிக்கும் விதமாக தனக்கு இருக்கும் கஷ்டங்களை பட்டியலிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியதாவது எங்களுக்கு நாங்க பண்ற ஒவ்வொரு வேளையும் உங்களுக்கு பிடிக்குமா? பிடிக்காதா? என்கிற டென்ஷன் அதிகமாகவே இருக்கும். நாங்க பண்றது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நாங்கள் இப்போது இங்கே இல்லை. அதாவது உங்களுக்கு புடிச்ச மாதிரி வேலை பண்ணா தான் இங்கே நாங்கள் இருக்கவே முடியும். எந்த வாழ்க்கையும் யாருக்கும் ஈஸி கிடையாது.

பணக்காரர், மிடில் கிளாஸ், ஏழை என எல்லோருக்கும் ஒவ்வொரு விதமாக அவர்களது வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அது போல் தான் எங்களது வாழ்க்கையிலும் ஒவ்வொரு விதமாக பிரச்சினைகள் இருக்கிறது. இதுதான் ஒரு ஆர்ட்டிஸ்ட்டின் வாழ்க்கை என சிவாங்கி தெரிவித்திருக்கிறார். இவ்வாறு நெட்டிசன் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலடி கொடுத்த சிவாங்கியின் பதில் இணையத்தில் வைரலாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பையும், ஆதரவையும் பெற்று வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here