வில்லன் ‘சிட்டி ரோபோ’ கெட்டப்பில் களம் இறங்கிய சிவாங்கி – குக் வித் கோமாளி ப்ரோமோ ரிலீஸ்!

0
வில்லன் 'சிட்டி ரோபோ' கெட்டப்பில் களம் இறங்கிய சிவாங்கி
வில்லன் 'சிட்டி ரோபோ' கெட்டப்பில் களம் இறங்கிய சிவாங்கி

வில்லன் ‘சிட்டி ரோபோ’ கெட்டப்பில் களம் இறங்கிய சிவாங்கி – குக் வித் கோமாளி ப்ரோமோ ரிலீஸ்!

ஒவ்வொரு வாரமும் கோமாளிகள் வித்தியாச வித்தியாசமான கெட்டப்பில் வந்து மக்களை மகிழ்வித்து வருகின்றனர். அதிலும் இந்த வாரம் அனைத்து கோமாளிகளும் வில்லன் கதாபாத்திரத்தில் வரும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்துமே மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் எக்கச்சக்க ரசிகர்களின் ஆதரவை பெற்ற நிகழ்ச்சி என்றால் அது நிச்சயமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். குக் வித் கோமாளி சீசன் 2 அண்மையில் நிறைவடைந்து தற்போது சீசன் 3 கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. சீசன் 3 ல் புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, சக்தி மற்றும் சூப்பர் சிங்கர் பரத் ஆகியோர் கோமாளிகளாக பங்கு பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.60000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

பலரும் கோமாளிகள் செய்யும் அட்டகாசத்தை ரசிக்கவே ஒவ்வொரு வாரமும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தவறாது பார்த்து விடுகின்றனர். ஒவ்வொரு வாரமும் இந்த கோமாளிகள் வித்தியாச வித்தியாசமான கெட்டப்புடன் வந்து அந்த கதாபாத்திரமாகவே மாறி மக்களை மகிழ்வித்து வருகின்றனர். இந்த வாரம் வில்லன் கதாபாத்திரத்தில் கோமாளிகள் களம் இறங்குகின்றனர். சிட்டி ரோபோ கெட்டப்பில் சிவாங்கி இருக்கிறார். மேலும், பலரும் தங்களது கஷ்டங்களை மறந்து சிரிக்கவே இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் சமைக்கும் போது கோமாளிகளுக்கு ஏதேனும் டாஸ்க் கொடுக்கப்படுகிறது.

மேலும், இந்த நிகழ்ச்சியில் advantage task வைக்கப்படும். அதில் ஜெயிப்பவர்களுக்கு சிறு சிறு சலுகைகள் வழங்கப்படும். அந்த வகையில் இந்த வாரம் advantage taskக்கு பூசணிக்காயை கையில் கொடுத்து யார் அதிகமான அளவில் பூசணி ஜூஸ் பிழிகிறார்களோ அவர்களே advantage டாஸ்க்கில் வெற்றியாளர் என அறிவிக்கப்படுகிறது. தற்போது இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!