மீண்டும் ஒரு புதிய காரை வாங்கிய ‘குக் வித் கோமாளி’ மணிமேகலை – குவியும் வாழ்த்துக்கள்!

0
மீண்டும் ஒரு புதிய காரை வாங்கிய 'குக் வித் கோமாளி' மணிமேகலை - குவியும் வாழ்த்துக்கள்!
மீண்டும் ஒரு புதிய காரை வாங்கிய 'குக் வித் கோமாளி' மணிமேகலை - குவியும் வாழ்த்துக்கள்!
மீண்டும் ஒரு புதிய காரை வாங்கிய ‘குக் வித் கோமாளி’ மணிமேகலை – குவியும் வாழ்த்துக்கள்!

சின்னத்திரை நட்சத்திரங்களில் தற்போது முன்னணியில் இருக்கும் ‘குக் வித் கோமாளி’ புகழ் மணிமேகலை சமீபத்தில் தான் ஒரு BMW காரை வாங்கியிருந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு புதிய காரை வாங்கியுள்ளார்.

மணிமேகலை:

சன் மியூசிக் சேனலில் பல ஆண்டுகளாக தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் மணிமேகலை. இவர் நடன இயக்குனர் ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில வருடங்களுக்கு முன்னர் Mr & Mrs சின்னத்திரை சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதில் இந்த ஜோடி நீங்கா இடத்தை பிடித்து விட்டது. அதில் இருந்து பல நிகழ்ச்சிகளிலும் மணிமேகலை மற்றும் அவரது கணவரும் கலந்து கொண்டனர். மக்களிடம் மணிமேகலையின் நகைசுவை திறன் சென்று சேருவதற்கு முக்கிய காரணமா குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். மக்களிடம் தனக்கு இருந்த வரவேற்பை உபயோகப்படுத்திக் கொள்ளும் விதமாக கடந்த ஊரடங்கு காலத்தில் ஒரு யூடூப் சேனல் ஒன்றையும் தொடங்கினார்.

சந்திரகலாவின் திட்டங்களை தெரிந்து கொண்ட தமிழ், கார்த்திக் வசு நிலை என்ன? இன்றைய ‘தமிழும் சரஸ்வதியும்’ எபிசோட்!

அதில், இவர்கள் இருவரும் சேர்ந்து பல வீடியோக்களை பதிவு செய்து வருவார்கள். சமீபத்தில் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளையும் மணிமேகலை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பாக மணிமேகலை ஒரு புதிய BMW கார் ஒன்றை வாங்கியிருந்தார். அது வாங்கிய சில நாட்களிலேயே அவர்கள் இருவருக்கும் கார் விபத்து என்று செய்திகள் வந்தது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பிறகு தான் மணிமேகலை தனது பழைய கார் ஒன்றில் செல்லும் போது விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், தாங்கள் நலமாக இருப்பதாகவும் அறிவித்தார்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து ஓய்வெடுத்த அருண் – போட்டோ ரிலீஸ்! ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்நிலையில், மணிமேகலையின் கணவர் ஹுசைன் தனது இன்ஸ்டா பக்கத்தில் இருவரும் சேர்ந்து ஒரு புதிய காரை வங்கியிருப்பதாகவும், அதன் புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். மணிமேகலை விளையாட்டாக தனது பழைய காருக்கு பை சொல்வது போலவும், புதிய கார் வந்து விட்டது போலவும் வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய கார் வாங்கியதற்காக ரசிகர்கள் மணிமேகலைக்கு தங்களின் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். இந்த புகைபடத்திற்கும் லைக்குகள் குவிந்து வருகின்றது. இவர்களது வெற்றிகள் தொடரட்டும் என்று ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!