கோடி கணக்கில் சொத்து குவித்த குக் வித் கோமாளி விஜே மணிமேகலை – ரசிகர்கள் ஷாக்!

0

கோடி கணக்கில் சொத்து குவித்த குக் வித் கோமாளி விஜே மணிமேகலை – ரசிகர்கள் ஷாக்!

சின்னத்திரை மற்றும் மற்றும் வெள்ளித்திரையில் நடிக்கும் நட்சத்திரங்களின் சொத்து விவரத்தையும் ஒரு நாள் சம்பளத்தை குறித்த தகவல்களையும் தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வத்தை காட்டுவது புதிதல்ல. இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் டாப் மோஸ்ட் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி ஷோவில் பிரபல கோமாளி மணிமேகலையின் சொத்து விவரம் ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது.

குக் வித் கோமாளி மணிமேகலை:

சின்னத்திரையை பொருத்த மட்டிலும் அவற்றில் உள்ள நடிகர் நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் எவ்வளவு வரவேற்பு உள்ளதோ அதே அளவுக்கு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கும் தனி ரசிகர் பட்டாளங்கள் இருந்து தான் வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் டாப் லிஸ்டில் இருக்கும் டிடி, கோபிநாத், மாகாபா ஆனந்த், பிரியங்காவை தொடர்ந்து தற்போது விஜே மணிமேகலையும் டப் கொடுத்து வருகிறார். மணிமேகலை முதன்முதலில் காலேஜில் படித்துக் கொண்டே பார்ட் டைமில் ஆங்கரிங் வேலையாக சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ஒரு ரியாலிட்டி ஷோ மூலம் அறிமுகமானார். 90ஸ் கிட்ஸ் களின் ஃபேவரைட் தொகுப்பாளினி என்றே சொல்லலாம்.

தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – ‘WIFI’ வசதி அறிமுகம்!

அந்த அளவுக்கு இவரது துருதுருவென பேச்சும், கலகலவென காமெடி சென்சும் அதிகளவு ரசிகர் பெருமக்களை ஈர்த்து வைத்தது. அதன் பிறகு நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மணிமேகலைக்கு துணை நடன இயக்குனரான ஹுசைன் அவர்களுடன் காதல் மலர்ந்தது. இவர்களின் காதலுக்கு மணிமேகலையின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவ்வாறு திருமணத்திற்குப் பிறகு மீடியாவில் பிரேக் எடுத்துக்கொண்ட மணிமேகலை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் ரசிகர்கள் கவனத்தை தன் வசம் திருப்பி என்ட்ரி கொடுத்தார்.

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் பல ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளினியாகவும் மாஸ் காட்டி வருகிறார். இவ்வாறு மணிமேகலை தொழிலில் வளர்ச்சியை காண காண சொந்த வாழ்க்கையிலும் உயர்ந்தவராக மாறியுள்ளார். மணிமேகலையும் அவரது கணவரும் மீடியாவில் சம்பாதிக்கும் பணத்தை தவிர்த்து பல புரோமோஷன் மூலமாகவும் அதிக அளவு வருமானத்தை சேர்த்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் 2 சொகுசு கார்களையும், 2 ஏக்கர் நிலத்தையும் வாங்கி அதில் தற்போது வீடு கட்டும் வேலையில் இறங்கியுள்ளது போன்ற வீடியோக்களை அவர்களது யூடியுப் தளத்தில் பதிவிட்டிருந்தார்கள்.

இதைப் பார்த்த ரசிகர்களுக்கு ஒரு பக்கம் சந்தோஷத்தைக் கொடுத்தாலும் மறுபக்கம் இவ்வளவு வளர்ச்சிக்கு காரணம் என்ன என்ற சந்தேகமும் இவர்களது மாத வருமானம் சொத்து விவரம் போன்ற கேள்விகளும் எழும்பியுள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக விஜய் டிவி பிரபலங்களின் சொத்து மதிப்பு குறித்த விவரம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை தொடர்ந்து தற்போது டிஜே மணிமேகலையின் சொத்து விவரம் இந்திய மதிப்பில் 7 கோடி முதல் 39 வரை என குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் இதுவரை வெளியாகிய கோபிநாத், டிடி, மாகாபா, பிரியங்கா அவர்களின் சொத்து விவர உறுதி செய்யப்படாத நிலையில் இவரது சொத்து மதிப்பு விவரம் அனைவரையும் தலைசுற்ற வைக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here