நடு ரோட்டில் விருந்து சாப்பிட்ட ‘குக் வித் கோமாளி’ பாலா – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

0
நடு ரோட்டில் விருந்து சாப்பிட்ட 'குக் வித் கோமாளி' பாலா - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் நெகிழ்ச்சி!
நடு ரோட்டில் விருந்து சாப்பிட்ட 'குக் வித் கோமாளி' பாலா - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் நெகிழ்ச்சி!
நடு ரோட்டில் விருந்து சாப்பிட்ட ‘குக் வித் கோமாளி’ பாலா – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ல் கலந்து கொண்டு வரும் நட்சத்திர கோமாளி பாலா தற்போது நடுத்தெருவில் அமர்ந்து உணவு உண்ணும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

குக் வித் கோமாளி பாலா

தமிழ் சின்னத்திரையில் டைமிங் காமெடிக்கு பெயர் போனவர் ‘குக் வித் கோமாளி’ பாலா. விஜய் டிவியில் ‘கலக்கப்போவது யாரு’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் அறிமுகமான பாலா அந்த ஷோவின் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றி அவருக்கு அளித்த சந்தோஷத்தை விட அதிகமாக இருந்தது அவருக்கு கிடைத்த விமர்சனங்கள் தான். அந்த வகையில் காமெடி ஷோவின் டைட்டில் வின்னராக இருந்தும் மக்கள் மத்தியில் கிளிக் ஆகாமல் இருந்த பாலா ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்.

Exams Daily Mobile App Download

கிட்டத்தட்ட 3 சீசன்களாக ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு வரும் பாலா தற்போது தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி இருக்கிறார். அதுவும் இந்த ஷோவில் இவர் சொல்லும் டைமிங் காமெடிக்கு மக்கள் மத்தியில் இருந்து ஏகப்பட்ட வரவேற்புகள் கிடைத்து வருகிறது. இதனுடன், சமீபத்தில் பாலாவுக்கு சிறந்த நகைச்சுவை நட்சத்திரம் என்ற விருதும் கூட கிடைத்தது. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக புகழின் உச்சிக்கு வந்திருக்கும் பாலா தற்போது நாடு ரோட்டில் அமர்ந்து உணவு அருந்திய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் மாப்பிள்ளை பார்க்க சரக்குடன் செல்லும் வெண்பா – அடுத்த கதைக்களம்!

அதாவது, இரவு 12 மணிக்கு மேல் ஹோட்டலில் அமர்ந்து உணவு உண்ணும் அனுமதி இல்லாததால் பார்சல் மூலம் உணவு வாங்கி வரும் பாலா சாப்பிட இடம் இல்லாமல் பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்து உணவு சாப்பிட்டுருக்கிறார். அந்த சாப்பாட்டை ரசித்து ருசித்து சாப்பிடும் பாலா தெரு நாய்களுக்கும் விருந்து அளித்துள்ளார். இது தொடர்பான வீடியோ வலைதளங்களில் வெளியாக பாலாவின் எளிமையை பார்த்து வியந்த ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!