விஜய் டிவி “குக் வித் கோமாளி” ராகுல் தாத்தா யார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "குக் வித் கோமாளி" ராகுல் தாத்தா யார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “குக் வித் கோமாளி” ராகுல் தாத்தா யார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி “குக் வித் கோமாளி சீசன் 3” நிகழ்ச்சியின் போட்டியாளர் ராகுல் தாத்தா யார் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

நடிகர் ராகுல் தாத்தா:

தமிழ் சினிமாவில் பல படங்களில் ஒரு சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் ராகுல் தாத்தா. அவர் முதிர்ச்சி, வெள்ளை முடி, தாடி, தழுதழுக்கும் குரல் உடன் இருந்தாலும், சினிமாவில் அவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வருகிறது. அவர் யார்? அவருடைய பின்னணி என்ன என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் அவர் எம்.ஜி.ஆரின் சமையல்காரராக பல வருடங்கள் அவருடனே இருந்தவர்.

சமந்தா, நாகசைதன்யா விவாகரத்திற்கு உண்மை காரணம் – வைரலாகும் செய்தி! நாகார்ஜுனா விளக்கம்!

சினிமாவில் இவருக்கு நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் சினிமாவில் அவர் களமிறங்கினார். அவர் எம்ஜிஆர் படத்தில் தொடங்கி ரஜினி, கமல், சிவாஜி, விஜய் விஜயசேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோருடன் நடித்து இருக்கின்றார் . விஜய் உடன் கத்தி படத்தில் நடித்ததன் மூலம் அவருடன் நெருக்கமான நட்பு ஏற்பட்டது. நடிகர் விஜய் அவருக்கு வாட்ச் ஒன்றை பரிசளித்தாராம். மேலும் அவருக்கு பல நடிகர்களின் நட்பு இருக்கிறதாம். இந்நிலையில் ராகுல் தாத்தா தற்போது புதிய அவதாரம் ஒன்றை எடுத்து இருக்கிறார்.

‘பாரதி கண்ணம்மா’ வினுஷா கடந்து வந்த பாதை – அவரே பகிர்ந்து கொண்ட தகவல்! ரசிகர்கள் உற்சாகம்!

அவர் விஜய் டிவியில் பிரபலமான “குக் வித் கோமாளி சீசன் 3” நிகழ்ச்சியில் அவர் போட்டியாளராக களமிறங்கி இருக்கிறார். போன வாரம் முதல் எபிசோட் வந்த நிலையில் அதில் ராகுல் தாத்தா தன்னுடைய திறமையை வைத்து ரசிகர்களை சிரிக்க வைத்தார். மேலும் இன்னும் வர எபிசோடுகளில் அவருடைய திறமை முழுமையாக வெளியே வர இருக்கிறது என்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here