“குக் வித் கோமாளி சீசன் 3” நிகழ்ச்சியில் ரீஎன்ட்ரி கொடுத்த புகழ் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

0
"குக் வித் கோமாளி சீசன் 3" நிகழ்ச்சியில் ரீஎன்ட்ரி கொடுத்த புகழ் - ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!
“குக் வித் கோமாளி சீசன் 3” நிகழ்ச்சியில் ரீஎன்ட்ரி கொடுத்த புகழ் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி “குக் வித் கோமாளி சீசன் 3” பிரமாண்டமாக தொடங்கப்பட்ட நிலையில் அடுத்த வார எபிசோடில் புகழ் வர இருப்பதாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

குக் வித் கோமாளி சீசன் 3:

குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி இரண்டு வாரங்களுக்கு முன் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த சீசனில் ரோஷினி, வித்யூலேகா, கிரேஸ், அம்மு அபிராமி, ராகுல் தாத்தா, சந்தோஷ் பிரதாப், மனோபாலா உள்ளிட்ட 10 போட்டியாளர்கள் களமிறங்கி இருக்கின்றனர். மேலும் கோமாளிகளாக சக்தி, மணி மேகலை, ஷிவாங்கி, பாலா, சுனிதா, அதிர்ச்சி அருண் உள்ளிட்ட பலர் இருக்கின்றனர். இதுவரை இரண்டு சீசன்கள் வெற்றி பெற முக்கிய காரணமாக நகைசுவை நடிகர் புகழ் இருந்தார்.

விஜய் டிவி “குக் வித் கோமாளி சீசன் 3” நிகழ்ச்சியில் புகழ் என்ட்ரி எப்போது? வித்யூலேகா சொன்ன விளக்கம்!

அவர் தற்போது பல படங்களில் கமிட்டாகி இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் கலந்து கொள்ளவில்லை. அதனால் ரசிகர்கள் வருத்தத்துடன் இருந்தாலும் புகழ் சிறப்பு எபிசோடுகள் சிலவற்றில் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் நிம்மதியாக இருந்தனர். இந்நிலையில் புகழ் காதலர் தின எபிசோடுகளில் வர இருக்கிறார் என செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் அடுத்த வார எபிசோடில் புகழ் மாஸாக என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜூலி? முதல் வார எலிமினேஷன்! ரசிகர்கள் அதிர்ச்சி!

அது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் தொகுப்பாளர் ரக்ஷன் புகழ் பெயரை சொல்ல, புகழ் ஹீரோ போல என்ட்ரி கொடுக்கிறார். அது போட்டியாளர்களுக்கும் கோமாளிகளுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. மேலும் புகழ் என்ட்ரி ஆனதும் சென்று செப் தாமுவை அப்பா எப்படி இருக்கீங்க என்று அவருக்கே உரித்தான ஸ்டைலில் அன்பை வெளிப்படுத்தினார். அதனால் இந்த வார எபிசோட் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!