குக் வித் கோமாளி’ சிவாங்கிக்கு நடந்த சோகம் – எமோஷனல் ஆன பதிவு! ரசிகர்கள் அதிர்ச்சி!

0
குக் வித் கோமாளி' சிவாங்கிக்கு நடந்த சோகம் - எமோஷனல் ஆன பதிவு! ரசிகர்கள் அதிர்ச்சி!
குக் வித் கோமாளி' சிவாங்கிக்கு நடந்த சோகம் - எமோஷனல் ஆன பதிவு! ரசிகர்கள் அதிர்ச்சி!
குக் வித் கோமாளி’ சிவாங்கிக்கு நடந்த சோகம் – எமோஷனல் ஆன பதிவு! ரசிகர்கள் அதிர்ச்சி!

விஜய் டிவியின் செல்லக்குட்டியாக உள்ள சிவாங்கி தற்போது வெளியிட்டுள்ள பதிவு ஒன்று அனைவராலும் கவனிக்கப்பட்டு உள்ளது. மிகவும் எமோஷனலாக இருக்கும் இந்த பதிவினால் சிவாங்கிக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

சிவாங்கியின் பதிவு:

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அனைவருக்கும் மிகவும் பிடித்த பெண்ணாக மாறியவர்தான் சிவாங்கி. முதன்முதலில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தான் சிவாங்கி அறிமுகம் ஆனார். அதன்பிறகு, தனது குரலின் இனிமையினாலும், துறுதுறுப்பான நடவடிக்கைகளினாலும், விளையாட்டு தனமான செய்கைகளினாலும் மக்கள் மத்தியில் மிகவும் பேமாஸாகி விட்டார். இதனால் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கான வாய்ப்பு கிடைத்தது.

விஜய் டிவியின் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபி யார் தெரியுமா? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

தொடர்ந்து 3 சீசன்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொள்கிறார். இது தவிர பல ஆல்பம் பாடல்கள் மற்றும் சினிமாவிலும் கூட பாடல்களை பாடி வருகிறார். தற்போது சிவகார்த்திகேயனின் டான் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். நாளுக்கு நாள் சிவாங்கிக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவாங்கி ஒரு வாரம் வரவில்லை என்றால் கூட ரசிகர்கள் மிகவும் வருத்தப்படும் அளவுக்கு ரசிகர்களை கவர்ந்துள்ளார் சிவாங்கி.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அறிமுகமாகும் நடிகை தேஜஸ்வினி? வைரலாகும் ப்ரோமோ!

தற்போது சிவிங்கி வெளியிட்டுள்ள ஒரு பதிவு அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. அதில், நீங்கள் தனிமையில் இருக்கிறீர்கள் என்பதற்காக மிகவும் பிரச்னைகளை உண்டாகும் மனிதர்கள் உடன் ஒரு போதும் சேர்க்காதீர்கள். அது, நாம் தாகமாக இருக்கிறோம் என்பதற்காக விஷத்தை குடிப்பது போன்றதற்கு சமம் என்று குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எப்போதும் மிகவும் ஜாலியாக இருக்கும் சிவாங்கிக்கு என்ன ஆனது, ஏன் இப்படி பதிவு வெளியிட்டுள்ளார் என்று பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!