சர்ச்சையில் குக் வித் கோமாளி சீசன் 3 | ‘என்னுடைய நெகட்டிவ் தான் தெரிகிறது’ – வித்யூலேகா ஓபன் டாக்!

0
சர்ச்சையில் குக் வித் கோமாளி சீசன் 3 | 'என்னுடைய நெகட்டிவ் தான் தெரிகிறது' - வித்யூலேகா ஓபன் டாக்!
சர்ச்சையில் குக் வித் கோமாளி சீசன் 3 | 'என்னுடைய நெகட்டிவ் தான் தெரிகிறது' - வித்யூலேகா ஓபன் டாக்!
சர்ச்சையில் குக் வித் கோமாளி சீசன் 3 | ‘என்னுடைய நெகட்டிவ் தான் தெரிகிறது’ – வித்யூலேகா ஓபன் டாக்!

விஜய் டிவி “குக் வித் கோமாளி சீசன் 3” நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக களமிறங்கி இருக்கும் நடிகை வித்யூலேகா தனது கணவருடன் இணைந்து பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார். அதில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி குறித்த பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்து இருக்கிறார்.

நடிகை வித்யூலேகா:

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி ஒரு சமையல் நகைச்சுவை நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை இரண்டு சீசன்கள் மாபெரும் வெற்றி அடைந்த நிலையில் மூன்றாவது சீசன் கடந்த 2 வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. அதில் பல பிரபலங்கள் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளனர். அதில் ஒருவர் தான் நடிகை வித்யூலேகா. அவர் பிரபல நடிகர் மோகன் ராமன்வின் மகள் ஆவார். அவருக்கு சில மாதங்களுக்கு முன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

புது கடை திறப்பு விழாவில் மக்கள் கூட்டத்தில் சிக்கிய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கண்ணன் – வைரலாகும் வீடியோ!

அவர் 2012 ஆம் ஆண்டு வெளியான ‘நீதானே எந்தன் பொன்வசந்தம்’ படத்தில் நடித்ததன் மூலமாக பிரபலமானவர். இந்நிலையில் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளது புது அனுபவமாக இருப்பதாக சொல்லி இருக்கிறார். அவர் சைனீஸ் உணவுகளை தான் அதிகம் சமைப்பாராம். வீட்டில் தொடர்ந்து சமைப்பவர் இல்லையாம், அதனால் இந்தியன் உணவுகளை சமைப்பது எல்லாம் பெரிய சிரமமாக இருப்பதாக அவர் விளக்கி இருக்கிறார்.

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் நடிகை சுசித்ரா யார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

நிகழ்ச்சியில் அதிகமாக டென்ஷன் ஆகும் ஒரு போட்டியாளராக இவர் இருக்கிறார். அது குறித்து அவர் கூறுகையில் நிகழ்ச்சியில் என்னோட நெகட்டிவ்ஸ் அதிகமாக வருவதாக அவர் விளக்கம் அளித்து இருக்கிறார். தொடர்ந்து பேசிய அவர் இந்த சீசனில் இனி வரும் எபிசோடுகளில் நகைச்சுவைக்கு குறைவில்லமால் இருக்கும் எனவும், தனது திருமண வாழ்க்கை குறித்தும் பல விஷயங்களை ஷேர் செய்து இருக்கிறார். அப்போது KPY பாலா அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here