விஜய் டிவி “குக் வித் கோமாளி சீசன் 3” நிகழ்ச்சியில் மணிமேகலை செய்த காரியம் – ப்ரோமோ ரிலீஸ்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "குக் வித் கோமாளி சீசன் 3" நிகழ்ச்சியில் மணிமேகலை செய்த காரியம் - ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி “குக் வித் கோமாளி சீசன் 3” நிகழ்ச்சியில் மணிமேகலை செய்த காரியம் – ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி “குக் வித் கோமாளி சீசன் 3” தொடங்கப்பட்டு 2 வாரங்கள் மட்டுமே ஆன நிலையில், சென்ற வார காமெடி நிகழ்வுகள் குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மணிமேகலை செய்த காரியம் அனைவரையும் ரசிக்க வைத்தது.

குக் வித் கோமாளி சீசன் 3 ப்ரோமோ:

குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி அனைவரின் எதிர்பார்ப்பின் படி இரண்டு வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. முதல் எபிசோடில் புகழ் வராததால் சுவாரசியம் குறைவாக இருந்தது. இரண்டாவது வாரத்தில் இருந்து புகழ் என்ட்ரி கொடுத்தார். அதனால் வழக்கம் போல நிகழ்ச்சி சூடு பிடித்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் சமையல் செய்ய களமிறங்கி இருக்கின்றனர். மேலும் கடந்த இரண்டு சீசன்களில் இருந்து வந்த கோமாளிகள் சிலர் கலந்து கொண்டு இருக்கின்றனர்.

சந்தியாவை வீட்டை விட்டு துரத்துவதாக சவால் விட்ட அர்ச்சனா – “ராஜா ராணி 2” ப்ரோமோ ரிலீஸ்!

அது போக சில புதிய கோமாளிகளும் களமிறங்கி இருக்கின்றனர். அதனால் சுவாரசியத்திற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்ற வார எபிசோடில் சமையல் செய்யும் போட்டியாளர்கள் வித்தியாசமாக பான் கேக் செய்ய வேண்டும் என டாஸ்க் வழங்கப்பட்டது, அதில் பலர் தங்களது கிரியேட்டிவிட்டியை பயன்படுத்தி கேக் செய்து இருந்தனர். மேலும் கோமாளிகள் விளையாட்டு தனமாக சென்று மற்றவர்களின் கேக்குகளை திருடினார்கள்.

விரைவில் அப்பாவாகும் “தமிழும் சரஸ்வதியும்” சீரியல் நடிகர் – வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் வாழ்த்து!

இந்நிலையில் மனோபாலாவின் கேக்கை மணிமேகலை திருட அதை அப்படியே வைக்கும்படி ரோஷினி சொல்கிறார். பின் மணிமேகலையின் கேக்கை பார்த்த நடுவர்கள் இது என்ன என கேட்க ஸ்டார் விஜய் எனவும் குக் வித் கோமாளி என்பதை CWC என எழுதி இருப்பதாக சொல்கிறார். இந்த எபிசோடும் ஏகப்பட்ட ரசிகர்களை ரசிக்க வைப்பது போல இருந்தது. அடுத்த வாரமும் புகழ் வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here