‘குக் வித் கோமாளி’ புகழ் சிவாங்கியின் வீட்டில் விசேஷம் – வைரலாகும் வீடியோ!

0
'குக் வித் கோமாளி' புகழ் சிவாங்கியின் வீட்டில் விசேஷம் - வைரலாகும் வீடியோ!
'குக் வித் கோமாளி' புகழ் சிவாங்கியின் வீட்டில் விசேஷம் - வைரலாகும் வீடியோ!
‘குக் வித் கோமாளி’ புகழ் சிவாங்கியின் வீட்டில் விசேஷம் – வைரலாகும் வீடியோ!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான சிவாங்கி தனது அண்ணனின் திருமணத்தில் கலந்துகொண்டு குடும்பத்தினருடன் சேர்ந்து அரட்டையடிக்கும்படியான வீடியோ யூடுயூப் பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சிவாங்கியின் வீட்டில் திருமணம்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் தான் சிவாங்கி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் கூட சிவாங்கி கலந்துகொண்டார். ஆனால், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மட்டும்தான் சிவாங்கியை ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக்கியது. இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாகவே சிவாங்கிக்கு எக்கச்சக்கமான திரைப்பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் கூட சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.

Exams Daily Mobile App Download

எக்கச்சக்கமான திரைப்பட வாய்ப்புகளை கைக்குள் வைத்திருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தவறாது கலந்து கொண்டு வருகிறார். சிவாங்கிக்காக மட்டுமே ரசிகர்கள் பலரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை கண்டு ரசித்து வருகின்றனர். அவ்வப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் போட்டோஷூட் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பிலே இருந்து வருகிறார்.

கோபி & ராதிகா திருமணம் பற்றிய ஆதாரத்துடன் எழிலிடம் காட்டிய ராஜேஷ் – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்து வருபவை!

தற்போது சிவாங்கியின் அண்ணன் திருமணத்தில் குடும்பத்தினருடன் சேர்ந்து அரட்டை அடிக்கும்படியான வீடியோ ஒன்றை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், சிவாங்கியின் அண்ணனின் திருமணம் கேரளா ஸ்டைலில் நடைபெற்றுள்ளது. கேரளா ஸ்டைலில் எந்த மாதிரியான திருமண சடங்குகள் நடத்துவார்கள், எந்தெந்த உணவுகளை திருமணத்தில் பரிமாறி உள்ளனர் என்பதற்கான அனைத்து பதிவுகளையும் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!