கோமாளிகளாக மாற்றிய “குக் வித் கோமாளி சீசன் 3” குக்குகள் – வைரலாகும் வீடியோ!

0
கோமாளிகளாக மாற்றிய
கோமாளிகளாக மாற்றிய "குக் வித் கோமாளி சீசன் 3" குக்குகள் - வைரலாகும் வீடியோ!
கோமாளிகளாக மாற்றிய “குக் வித் கோமாளி சீசன் 3” குக்குகள் – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவியில் பலரின் மனம் கவர்ந்த ரியாலிட்டி நிகழ்ச்சியான “குக் வித் கோமாளி சீசன் 3″ல் குக்குகளாக கலந்து கொண்டுள்ள பிரபலங்கள் கோமாளிகள் போல நடந்து கொள்ளும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி பிரபலங்கள்:

குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. முதல் எபிசோடில் புகழ் வராததால் சுவாரசியம் குறைவாக இருந்தது. இரண்டாவது வாரத்தில் இருந்து புகழ் என்ட்ரி கொடுத்தார். அதனால் வழக்கம் போல நிகழ்ச்சி சூடு பிடித்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் சமையல் செய்ய களமிறங்கி இருக்கின்றனர். மேலும் கடந்த இரண்டு சீசன்களில் இருந்து வந்த கோமாளிகள் சிலர் கலந்து கொண்டு இருக்கின்றனர்.

TN Job “FB  Group” Join Now

அது போக சில புதிய கோமாளிகளும் களமிறங்கி இருக்கின்றனர். அதனால் சுவாரசியத்திற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. சமையல் செய்யும் குக்குகளாக பாரதி கண்ணம்மா ரோஷினி, சந்தோஷ், கிரேஸ் கருணாஸ், அம்மு அபிராமி, தர்ஷன், வித்யூலேகா ஆகியோர் இருக்கின்றனர். வாரந்தோறும் ஒளிபரப்பாகி வரும் எபிசோடுகளை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். ஒரு சில எபிசோடுகளில் புகழ் என்ட்ரி கொடுக்கிறார்.

எழில், அமிர்தாவின் திருமண வைபோகம் – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்து வரப்போகும் திருப்பம்!

இந்நிலையில் கோமாளிகளை விட இந்த சீசனில் குக்குகள் செய்யும் லூட்டி தாங்க முடியாமல் இருக்கிறது. அதனால் பலர் இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்க்கின்றனர். இந்நிலையில் குக்குகள் கோமாளிகள் போல செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் சந்தோஷ், ரோஷினி, ஸ்ருதிகா, தர்ஷன், அம்மு அபிராமி ஆகியோர் இருக்கின்றனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!