அனைத்து அரசு பள்ளிகளும் CBSE பள்ளிகளாக மாற்றம் – தர்மேந்திர பிரதான் தகவல்!

0
அனைத்து அரசு பள்ளிகளும் CBSE பள்ளிகளாக மாற்றம் - தர்மேந்திர பிரதான் தகவல்!
அனைத்து அரசு பள்ளிகளும் CBSE பள்ளிகளாக மாற்றம் - தர்மேந்திர பிரதான் தகவல்!
அனைத்து அரசு பள்ளிகளும் CBSE பள்ளிகளாக மாற்றம் – தர்மேந்திர பிரதான் தகவல்!

இந்தியாவில் புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஜூலை 29ம் தேதி அன்று ஒப்புதல் அளித்தது. இந்த புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் உள்ளது. தற்போது இதனை முழுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல் தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கை

தேசிய கல்விக் கொள்கையானது கடந்த 1968ம் ஆண்டு முதன்முதலில் உருவாக்கப்பட்டது. இதையடுத்து 42வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தின்படி 1976ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் கல்வி பொதுப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து 1986ம் ஆண்டு கல்வி கொள்கையானது திருத்தப்பட்டது. அடுத்ததாக 1992ம் ஆண்டு கல்விக் கொள்கை மீண்டும் திருத்தப்பட்டாலும் சில மாற்றங்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2016ம் ஆண்டு மே 27ம் தேதி டிஎஸ்ஆர் சுப்பிரமணியன் குழுவினால் கல்விக் கொள்கையில் மீண்டும் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது.

இறுதியாக 2020ம் ஆண்டுக்கான புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய கல்வி கொள்கையை முழுமையாக நாட்டில் அமலுக்கு கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரி மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். இதில் இவர் கூறியிருப்பதாவது, நாட்டில் புதிய கல்விக் கொள்கையை எதிர்கட்சியினர் அரசியல் ரீதியான காரணத்திற்காக எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், இதில் பல்வேறு அம்சங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆசிரியராக பணியாற்ற விருப்பமா? இதோ உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

Exams Daily Mobile App Download

மேலும் பள்ளிகளில் மாணவர்களுக்கு உள்ளூர் மொழிகளில் பாடம் கற்பிக்கப்படும் என்றும் அரசு பள்ளிகளில் மழலையர் பள்ளிகள் தொடங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளும் CBSE பள்ளிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை வேண்டும் என துணைநிலை ஆளுநர் மற்றும் கல்வித் துறை அமைச்சர் ஆகியோர் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக ஆலோசனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!