TNPSC, TNUSRB தேர்வுகளில் தமிழ் வழி இடஒதுக்கீடு தொடர்பாக சர்ச்சை – தேர்வர்கள் கோரிக்கை!

0
TNPSC, TNUSRB தேர்வுகளில் தமிழ் வழி இடஒதுக்கீடு தொடர்பாக சர்ச்சை - தேர்வர்கள் கோரிக்கை!
TNPSC, TNUSRB தேர்வுகளில் தமிழ் வழி இடஒதுக்கீடு தொடர்பாக சர்ச்சை - தேர்வர்கள் கோரிக்கை!
TNPSC, TNUSRB தேர்வுகளில் தமிழ் வழி இடஒதுக்கீடு தொடர்பாக சர்ச்சை – தேர்வர்கள் கோரிக்கை!

தமிழகத்தில் TNPSC மற்றும் TNUSRB மூலம் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளில் தமிழ்வழி இட ஒதுக்கீட்டை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பது தொடர்பாக நீதிமன்றம் ஓர் உத்தரவை வெளியிட்டுள்ள நிலையில், டிஎன்பிஎஸ்சி-யின் நிலைப்பாடு மற்றும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் நிலைப்பாடு ஆகியவற்றுக்குள் இருக்கும் முரண்கள் குழப்பமடையச் செய்வதாக தேர்வர்கள் கூறுகின்றனர்.

இடஒதுக்கீடு தொடர்பாக சர்ச்சை:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்பது தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பெற்ற ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும். மேலும் தமிழக காவல், சிறை மற்றும் தீயணைப்பு போன்ற சீருடை சேவைகளுக்கான பணியாளர்களை தேர்வு செய்ய தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த இரண்டு தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில், தமிழ் வழி இடஒதுக்கீடு என்பது முறையாக பின்பற்றப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Exams Daily Mobile App Download

அதாவது தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்க, 2010-ஆம் ஆண்டில் தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. இந்நிலையில், தமிழ்வழி இட ஒதுக்கீடு தொடர்பாக கடந்த ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றம் ஓர் உத்தரவை பிறப்பித்தது. அதில், அரசு பணிகளில் இடஒதுக்கீட்டைப் பெற, 9ம் வகுப்பு முதல் தகுதிப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், தமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவர்கள் அரசின் உதவித்தொகையை பெற்றிருப்பார்கள். எனவே, அந்த சான்றிதழை TNPSC பெற்று இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறியது.

உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை – மீறினால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை!

இருப்பினும் டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட “Frequently asked questions” என்ற ஆவணத்தில், உதவித்தொகை சான்றிதழை சமர்ப்பிக்கத் தேவையில்லை என குறிப்பிட்டது. மேலும், முதல் பட்டப்படிப்பை ஆங்கில வழியில் படித்துவிட்டு, இரண்டாவது பட்டப்படிப்பை தொலைநிலைக் கல்வி மூலம் தமிழ் வழியில் படித்திருந்தாலும், தமிழ்வழி இடஒதுக்கீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என கூறியது. அதே நேரத்தில், ஆய்வாளர் பணிக்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. அதில், பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, முதல் இளநிலை பட்டத்தை தமிழ் வழியில் பயின்று பெற்றிருக்க வேண்டும் எனக் குறிபிட்டுள்ளது.

தமிழ்வழி இடஒதுக்கீடு குறித்து நீதிமன்றம் ஓர் உத்தரவை வெளியிட்டுள்ள நிலையில், டிஎன்பிஎஸ்சி மற்றும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் நிலைப்பாடு ஆகியவற்றுக்குள் இருக்கும் முரண்கள் குழப்பமடையச் செய்வதாக தேர்வர்கள் கூறுகின்றனர். மேலும் நீதிமன்ற வழிகாட்டுதலை முறையாகப் பின்பற்றி, 20 சதவீத இடஒதுக்கீட்டின் நோக்கம் நிறைவேறும் வகையில், விதிமுறைகளை TNPSC மற்றும் TNUSRB ஆகியவை மாற்றி அமைக்க வேண்டும் என்று துறை சார்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!