தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தை கலாய்த்த பிரபல சேனல் – சர்ச்சையாகும் வீடியோ! கோவத்தில் ரசிகர்கள்!

0
தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தை கலாய்த்த பிரபல சேனல் - சர்ச்சையாகும் வீடியோ! கோவத்தில் ரசிகர்கள்!
தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தை கலாய்த்த பிரபல சேனல் - சர்ச்சையாகும் வீடியோ! கோவத்தில் ரசிகர்கள்!
தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தை கலாய்த்த பிரபல சேனல் – சர்ச்சையாகும் வீடியோ! கோவத்தில் ரசிகர்கள்!

தளபதி விஜய் அவர்கள் நடித்த பீஸ்ட் படம் உலகளவில் நேற்றைய தினம் ஏப்ரல் 13 அன்று வெளியானதை தொடர்ந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் விஜய் டிவி கலைஞர்கள் இப்படத்தில் வரும் காட்சிகளையும், விஜய் அவர்களையும் கலாய்க்கும் விதமாக செய்த செயல் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தளபதி 65:

தமிழ் சினிமா துறையை பொருத்தவரை அநேக நடிகர், நடிகைகள் வந்தாலும் சில தான் அவர்களது நடிப்பால் என்றென்றும் நீங்கா இடத்தை மக்கள் மனதில் பிடித்திருப்பார்கள். இவ்வாறு தளபதி என்று செல்லமாக அழைக்க பெரும் விஜய் அவர்கள் தமிழ் மக்கள் மனதை மட்டுமல்லாமல் உலக அளவில் இருக்கும் அனைவர் மனதையும் கொள்ளை கொண்டவர் என்று சொன்னாலும் மிகாது. அந்த அளவுக்கு பேர்,புகழ் பெற்ற தளபதி விஜய் அவர்களின் 65 வது படமான’ பீஸ்ட் ‘ ஏப்ரல் 13 , நேற்றைய தினம் வெளியாகியிருந்தது.

பாக்கியலட்சுமி சீரியலில் கையும்,களவுமாக சிக்கிய கோபி – அடுத்து நடக்கும் திருப்பம்!

நெல்சன் இயக்கத்தில் வெளியான இப்படத்தை குறித்து ஆரம்பத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகளை வைத்தது. ஏனென்றால் நெல்சன் இயக்கம் என்றாலே நச்சுன்னு காமெடி இருக்கும், மற்றும் டாப் நடிகர் விஜய்க்கு இதில் எப்படி ரோல் இருக்கும் என்றெல்லாம் நினைத்து அதிக ஆவலுடன் காத்திருந்தனர். அந்த வகையில் மேலும் ரசிகர்களை குஷி படுத்தும் வகையில் வெளியான போஸ்டர்ஸ், அனிரூத் இசையில் வெளியான பாடல்கள், ட்ரெய்லர் என அனைத்தும் மொத்த ஹைப்பை ஏற்படுத்தியது.

இவ்வாறு அதிகளவில் எதிர்பார்த்து வெளியான இப்படம் தற்போது கலவையான விமர்சனத்தை தான் ரசிகர்களிடத்தில் பெற்று வருகிறது. இருப்பினும், விஜய் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். இப்படி இருக்கையில் விஜய் டிவி காமெடி பிரபலம் ராமர் பீஸ்ட் படத்தில் விஜய் அவர்கள் காவி துணியை கிழித்து வரும் காட்சியை போல் இவரும் திரையை கிழித்து, என்ட்ரி கொடுக்கிறார். அதுமட்டுமில்லாமல் சில வசனங்களையும் சொல்லி பேசியிருக்கிறார். அந்த காமெடியை பார்த்து, நிஷா உள்ளிட்ட விஜய் டிவி பிரபலங்கள் விழுந்து விழுந்து சிரித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!