
தமிழக அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த செவிலியர்கள் – பணி நிரந்தரம் செய்ய கோரி போராட்டம்.. அமைச்சர் கேள்வி!
தமிழக அரசு மருத்துவமனைகளில் கடந்த வருடங்களில் நியமிக்கப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று போராடி வருகின்றனர். இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை முக்கிய கேள்வி எழுப்பி உள்ளார்.
ஒப்பந்த செவிலியர்கள்:
தமிழகத்தில் கடந்த வருடங்களில் நிலவிய கொரோனா பெருந்தொற்றினால் நோயாளிகளின் எண்ணிக்கை எதிர்பாராத அளவு அதிகரித்தது. அப்போது நிலவிய மருத்துவ ஊழியர்கள் பற்றாக்குறையால் அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் ஒப்பந்த செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பணிகாலம் கடந்த 2022 டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்தது.
தூய்மை இந்தியா திட்டம் – QR கோட் மூலம் கழிப்பிடம் குறித்து புகார் அளிக்கலாம்! அரசின் புதிய முயற்சி!
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில் ஒப்பந்த செவிலியர்கள் பணி காலம் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் அத்தகைய திட்டம் இல்லை என்று அரசு திட்டவட்டமாகத் தெரிவித்தது. இதனால் அதிருப்தி அடைந்த ஒப்பந்த செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அரசை வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து ஆலோசித்து அரசு ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது. அதற்கு பதிலாக அவர்கள் வாழ்வாதாரம் கருதி செவிலியர்கள் மக்களை தேடி மருத்துவ திட்டத்திற்கு மாற்றம் செய்யப்படுவார்கள் என்று அறிவித்தது.
இதனை ஏற்காத ஒப்பந்த செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஒப்பந்த செவிலியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இதுவரை சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படவில்லை, இட ஒதுக்கீடு முறை ஏதும் பின்பற்றப்படவில்லை. இப்படிப்பட்ட சூழலில் நீங்கள் எவ்வாறு பணி நிரந்தரம் கோர முடியும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.