நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை – அமைச்சர் தலைமையில் குழு! முதல்வர் அறிக்கை!

0
நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை - அமைச்சர் தலைமையில் குழு! முதல்வர் அறிக்கை!
நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை - அமைச்சர் தலைமையில் குழு! முதல்வர் அறிக்கை!
நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை – அமைச்சர் தலைமையில் குழு! முதல்வர் அறிக்கை!

தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி இருக்கும் நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் அமைச்சர்கள் தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கனமழை அறிக்கை:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தென் மேற்கு பருவ மழை தொடங்கியதிலிருந்து பல மாவட்டங்களில் விடாமல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில், 1.6.2022 முதல் 14.7.2022 வரை 664.9 மி.மீ. மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூலை 14 ஆம் தேதி வரை மொத்தமாக 115.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தமிழகம் முழுக்க மதுபான பாட்டில்களை திரும்ப பெரும் திட்டம் அமல் – ஒரு மாத கால அவகாசம்!

இது பொதுவாக பெய்யும் மழை அளவை விட 48 விழுக்காடு கூடுதல் ஆகும். அதில் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் அதிக மழை பெய்து உள்ளது. மேலும் கடந்த ஒரு வாரமாக நீலகிரி மாவட்டத்தில் அதிகமான கனமழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திற்கான இயல்பான மழை அளவு 38.9 மி.மீ. என்ற நிலையில், தற்போது 263.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதனால் பெரிய மரங்கள் விழுந்துள்ளது பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 22 குடும்பங்களைச் சேர்ந்த 102 நபர்கள், 5 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான வசதிகளை அரசு செய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் தொடர் கன மழை ஏற்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரித்தப்படுத்தவும், வேளாண் / தோட்டக்கலைப் பயிர்களுக்கும், இதர உட்கட்டமைப்புகளுக்கும் ஏற்பட்டுள்ள சேதங்களை ஆய்வு செய்து அவற்றை உடனடியாக சீரமைக்கவும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் எஸ்.கே. பிரபாகர், ஆகியோரை நீலகிரி மாவட்டத்திற்கு அனுப்பு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

அது மட்டுமில்லாமல் மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 160 வீரர்கள் அடங்கிய இரண்டு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையின் குழுக்களும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகம் செய்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பாதிப்பு குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்துறை மண்டல குழுக்களும், மீட்புக் குழுக்களும் தயார் நிலையில் இருப்பதோடு பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் ஜே.சி.பி. இயந்திரங்கள், மரம் அறுப்பான்கள் உள்ளிட்ட உபகரணங்களுடன் தொடர்புடைய துறை அலுவலர்கள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!