விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 6” கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் – வெளியான முழு பட்டியல்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பிக்பாஸ் சீசன் 6" கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் - வெளியான முழு பட்டியல்!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 6” கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் – வெளியான முழு பட்டியல்!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த சீசனில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் முழு விவரம் குறித்த தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

பிக்பாஸ் சீசன் 6:

விஜய் டிவியில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தற்போது வரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி முடிந்துள்ளது. முதல் சீசனில் நடிகர் ஆரவ் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். இரண்டாவது சீசனில் ரித்திகா, மூன்றாவது சீசனில் முகின் , நான்காவது சீசனில் ஆரி, ஐந்தாவது சீசனில் ராஜு வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் அடுத்த அக்டோபர் மாதம் முதல் ஆறாவது சீசன் தொடங்கப்பட உள்ளது.

நடந்து முடிந்த சீசனில் பாதியிலேயே நடிகர் கமல் தொகுத்து வழங்காமல் அவருக்கு பதிலாக நடிகர் சிம்பு தொகுத்து வழங்கினார். அதனால் தற்போது தொடங்கப்பட உள்ள ஆறாவது சீசனில் யாரு தொகுப்பாளராக வருவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அந்த வகையில் தற்போது வெளியான ப்ரோமோவில் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார் என்பது உறுதியாகி இருக்கிறது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் மாதம் முதல் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மருத்துவ மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

Exams Daily Mobile App Download

மேலும் பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவலும் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. அதன் படி முதலாவதாக பாரதி கண்ணம்மா நடிகை ரோஷினி, தொகுப்பாளினி டிடி, பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா, யூடியூப் பிரபலம் ஜிபி முத்து, குக் வித் கோமாளி பவித்ரா, தர்ஷா குப்தா, தர்ஷன், ராஜா ராணி சீரியல் வில்லி விஜே அர்ச்சனா, பாடகி ஷிவாங்கியின் அம்மா, சீரியல் நடிகை செந்தில்குமாரி, வித்யூலேகா, மேலும் யூடுயூப் சேனல் நடத்தி வரும் அஜித், மலேசியா மாடல் டைமெரான் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது. ஆனால் உறுதியான தகவல் நிகழ்ச்சி தொடங்கிய பின் தான் தெரிய வரும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!