ஓணம் பம்பர் லாட்டரியில் ரூ. 25கோடி வென்ற ஆட்டோ ட்ரைவர் – குவியும் வாழ்த்துக்கள்!

0
ஓணம் பம்பர் லாட்டரியில் ரூ. 25கோடி வென்ற ஆட்டோ ட்ரைவர் - குவியும் வாழ்த்துக்கள்!
ஓணம் பம்பர் லாட்டரியில் ரூ. 25கோடி வென்ற ஆட்டோ ட்ரைவர் - குவியும் வாழ்த்துக்கள்!
ஓணம் பம்பர் லாட்டரியில் ரூ. 25கோடி வென்ற ஆட்டோ ட்ரைவர் – குவியும் வாழ்த்துக்கள்!

கேரளா மாநிலத்தில் அரசு மூலமாக லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆட்டோ ட்ரைவர் அனூப் என்பவருக்கு ஓணம் பண்டிகை பம்பர் பரிசாக ரூ. 25 கோடி விழுந்துள்ளது

லாட்டரி பரிசு:

கேரள மாநில லாட்டரி துறை சார்பில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022 லாட்டரி முடிவுகள் நேற்று மதியம் 2 மணிக்கு அறிவிக்கப்பட்டது. அதில் ஓணம் பம்பர் 2022 (BR-87) அல்லது திருவோணம் பம்பர் முடிவுகள் கேரள மாநில லாட்டரி துறையால் வெளியான நிலையில் அதில் திருவனந்தபுரத்தில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு முதல் பரிசு ரூ 25 கோடி அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு குழுக்களில் தேர்வானவர்களுக்கு 25 கோடி ரூபாய் முதல் ரூ 1,000 வரை பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது

அதில் முதல் பரிசாக ரூ. 25 கோடி ரூபாய் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அனூப் என்பவருக்கு கிடைத்துள்ளது. இரண்டாவது பரிசான ரூ.5 கோடியை கோட்டயத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கிடைத்தது. கேரளாவில் பம்பர் அறிவிக்கப்பட்ட நிலையில் அனைவர் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டது. 32 வயதான அனூப், இந்த லாட்டரி டிக்கெட்டை திருவனந்தபுரத்தில் வாங்கியிருக்கிறார். திருவனந்தபுரத்தில் உள்ள பழவங்காடி பகவதி ஏஜென்சி இந்த லாட்டரி டிக்கெட்டை விற்பனை செய்துள்ளது.

தற்கொலையில் முடிந்த பிரபல தமிழ் சீரியல் நடிகையின் வாழ்கை – போலீஸ் அதிரடி விசாரணை!

இரண்டாம் பரிசான ரூ.5 கோடி லாட்டரி டிக்கெட்டை கோட்டயத்தில் உள்ள மீனாட்சி லாட்டரி ஏஜென்சி விற்பனை செய்தது.இது குறித்து அனூப் கூறுகையில் நான் 22 ஆண்டுகளாக லாட்டரி டிக்கெட் வாங்கி வருவதாக தெரிவித்தார். இந்த பணத்தை வைத்து முதலில் நான் வீடு கட்டுவேன். வரி தொகை போக மீதி ரூ. 15. 75 கோடி தொகை கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார். சென்ற ஆண்டும் ஆட்டோ ட்ரைவர் ஒருவருக்கு ரூ. 12 கோடி கிடைத்தது. இந்த ஆண்டும் ஆட்டோ டிரைவருக்கு பரிசு கிடைத்துள்ளதால் இந்த செய்தி கேரளா முழுவதும் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!