சொந்த ஊரில் பிரம்மாண்டமாக புது வீடு கட்டிய சிவகார்த்திகேயன் – ரசிகர்கள் வாழ்த்து மழை!

0
சொந்த ஊரில் பிரம்மாண்டமாக புது வீடு கட்டிய சிவகார்த்திகேயன் - ரசிகர்கள் வாழ்த்து மழை!
சொந்த ஊரில் பிரம்மாண்டமாக புது வீடு கட்டிய சிவகார்த்திகேயன் - ரசிகர்கள் வாழ்த்து மழை!
சொந்த ஊரில் பிரம்மாண்டமாக புது வீடு கட்டிய சிவகார்த்திகேயன் – ரசிகர்கள் வாழ்த்து மழை!

மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டாக தொலைக்காட்சியில் அறிமுகமாகி தற்போது பலரும் ரசிக்கும் ஹீரோவாக வலம் வரும் நம்ம வீட்டு பிள்ளை சிவகார்த்திகேயன் அவர்கள் தற்போது தனது பூர்விக கிராமத்தில் அழகான வீடு ஒன்றை கட்டி, அதற்கான புதுமனை புகு விழாவில் நடந்த நிகழ்வுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன்:

தமிழ் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு தனது ஊரான திருச்சியில் இருந்து சென்னை வந்து முதலில், விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டாக அறிமுகமாகி பிரபல தொகுப்பாளராக படிப்படியாக முன்னேறி, சின்னத்திரையிலும் கால் தடம் பதித்து, அதன் பிறகு அசூர வெற்றியாக சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்து மாஸ் காட்டி, அதிக ரசிகர் பெருமக்களை கொண்டு தற்போது கோலிவுட்டில் வசூல் மன்னனாக மாறி இருப்பவர்தான் நம்ம வீட்டு பிள்ளை சிவகார்த்திகேயன்.

TN Job “FB  Group” Join Now

இவர் வெள்ளித்திரையில் மெரினா படத்தில் ஹீரோவாக நடித்ததை தொடர்ந்து பல ஹிட் படங்களிலும் நடித்து வந்தார். இவ்வாறு அவரது நடிப்பாலும், அவர் செய்த முயற்சியாலும் இப்போது முன்னணி நடிகர்களுக்கு இணையான ஹீரோவாக வளர்ந்து நிற்கிறார். சமீபத்தில் நெல்சன் தயாரிப்பில் வெளியான டாக்டர் படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து செம ஹிட்டடித்தது. மேலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் டான் திரைப்படம் வருகிற மே மாதம் 12 ஆம் தேதி வெளிவரவுள்ளது.

TNUSRB உதவி ஆய்வாளர் SI 444 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு! இன்றே கடைசி நாள்!

அதை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் தனது பூர்வீக கிராமத்தில் கட்டியுள்ள பிரம்மாண்டமான புது வீட்டுக்கு புகுமனை புகுவிழாவை இன்று நடத்தி உள்ளார். அவற்றில் உறவினர்கள், ஊர் மக்கள் மற்றும் சில மீடியா நபர்களும் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர். தற்போது அந்நிகழ்வில் வேட்டி சட்டையில் செம க்யூட்டாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன. மேலும், இந்நிகழ்வுக்கு அருவி மற்றும் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான வாழ் படங்களை இயக்கிய அருண் புருஷோத்தமன் மட்டுமே இந்த புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும், வேறெந்த சினிமா கலைஞர்களையும் அவர் அழைக்க வில்லை என்ற தகவலும் கசிந்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!