தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஷாக் – கல்வித்துறையில் தொடரும் குழப்பங்கள்!

0
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஷாக் - கல்வித்துறையில் தொடரும் குழப்பங்கள்!
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஷாக் - கல்வித்துறையில் தொடரும் குழப்பங்கள்!
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஷாக் – கல்வித்துறையில் தொடரும் குழப்பங்கள்!

தமிழகத்தில் பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. மேலும் பொது தேர்வுக்கு மாணவர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் ஆசிரியர்கள், பள்ளி கல்வித்துறையில் தொடரும் குழப்பங்கள் காரணமாக தாங்கள் அதிக பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக கூறியுள்ளனர்.

தொடரும் குளறுபடி:

தமிழகத்தில் கொரோனா 2வது அலை தாக்கம் குறைந்த வந்த சூழ்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் நவம்பர் மாதங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன. மீண்டும் கொரோனா எழுச்சி காரணமாக பள்ளிகள் நடப்பு ஆண்டு ஜனவரி 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கடந்த ஆண்டை போல் இல்லாமல், நடப்பு கல்வி ஆண்டில் கட்டாயம் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார். இதன் அடிப்படையில் மாணவர்களுக்கு விரைவில் பாடத்திட்டங்களை முடிக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு வலியுறுத்தப்பட்டன.

12 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி!

இந்நிலையில் இந்த கல்வி ஆண்டிற்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை முடிப்பதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஆசிரியர்கள் கூறியது, பாடத்திட்ட குறைப்பு, பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை, மீண்டும் வகுப்பு, தேர்வுக்குத் தயார்படுத்தல் உள்ளிட்ட அனைத்திலும் தினமும் ஒரு மாற்றம். இதனால் கற்பித்தலில் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து திருப்புதல் தேர்வு பொது தேர்வு போல் நடத்தப்படும் என்றும்,விடைத்தாள் மதிப்பீடு மையம் வேறு ஆசிரியர்கள் மதிப்பீடு என பல ஏற்பாடுகளை செய்த பின், வினாத்தாள் லீக் ஆன உடன் சாதாரண தேர்வு என்றும் மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படாது என்றும் தெரிவித்தனர்.

TNPSC குரூப் 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு! மே 21ல் தேர்வு!

மேலும் ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு, அட்டவணையை மட்டும் நான்கு முறை மாற்றி மாற்றி வெளியிட்டு அவதிக்கு ஆளாக்கினார். இந்த வகையில் ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்காமல் விடுமுறையிலும் பள்ளிக்கு வர வைக்க, ஏதேதோ பயிற்சியை வழங்குவது, பள்ளி தொடங்கியதும் ரத்து செய்தது போன்றவற்றால் ஏதும் பயன் இல்லை. இந்த வகையில் அமைச்சர் ஒரு அறிக்கை விடுவது, பள்ளி கல்வித்துறை கமிஷனர் வேறு வழிமுறைகளை வெளியிடுவது என கல்வித்துறையின் குழப்பமான செயல்பாடுகளால், மாணவர்களை கவனிக்க வழி இல்லாமல் உள்ளதாக கூறினர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!