ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட் – 10.5% சம்பள உயர்வு! Conferry India முக்கிய அறிக்கை!

0
ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட் - 10.5% சம்பள உயர்வு! Conferry India முக்கிய அறிக்கை!
ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட் - 10.5% சம்பள உயர்வு! Conferry India முக்கிய அறிக்கை!
ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட் – 10.5% சம்பள உயர்வு! Conferry India முக்கிய அறிக்கை!

கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பல தொழில்களில் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் சூழலில் வேகமாக தங்கள் தொழில்களில் மேம்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் Conferry India முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

சம்பள உயர்வு

இந்தியா முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதன் காரணமாக பல்வேறு தொழில்களில் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் சூழலில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் வேகமாக வளர்ச்சியை பெற்று வருகின்றனர். அத்துடன் இந்தியாவின் தனியார் நிறுவனங்களின் நிதி நிலையும் வலுவாக வளர்ந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நிதி நிலை அதிகரிப்பு சுமார் 9.25 சதவீதமாக இருந்தது.

U19 கிரிக்கெட் உலகக்கோப்பை: இந்திய அணியில் புதிய வீரர் சேர்ப்பு! BCCI அறிவிப்பு!

ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக 2020ம் ஆண்டு நிதிநிலை அதிகரிப்பு சுமார் 8.4 சதவீதமாக இருந்தது. இதனை தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் 2021ம் ஆண்டு 9.5 சதவீதமாக உயர்வு பெறும் என்று கணக்கிடப்படுகிறது. அத்துடன் கொரோனா தொற்றுக்குப் பிறகு பல நிறுவனங்கள் வியாபாரத்தையும், லாபத்தையும், வளர்ச்சியையும் பெற்றுள்ளனர். இந்த நிறுவனங்கள் தங்களின் லாபத்தில் ஒரு பகுதியை பணியாளர்களுக்கு ஊதியமாக அவர்கள் வங்கி கணக்கில் செலுத்த உள்ளதாக திட்டமிட்டுள்ளனர்.

EPFO பயனர்கள் கவனத்திற்கு – UMANG செயலி மூலம் கொரோனா முன்பணம் பெறுவது எப்படி? முழு விவரம் இதோ!

கொரோனா காரணமாக தனியார் நிறுவனங்கள் ‘Work From Home’ என்ற முறையை பின்பற்றி வருகின்றனர். அதனால் பல்வேறு நிறுவனங்கள் பணியாளர்களுக்கு சில சலுகைகளை வழங்கி வருகிறது. இதில் குறிப்பாக 46 சதவீத நிறுவனங்கள் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான பலன்களை வழங்க முடிவு செய்துள்ளனர். அத்துடன் 43 சதவீத நிறுவனங்கள் வீட்டில் இருந்து பணிபுரிய தேவையான அலுவலக அமைப்பை உருவாக்கிக் கொடுக்கவும் மேலும் 60 சதவீத நிறுவனங்கள் வைஃபை மற்றும் பயன்பாட்டு நிதியை அளிக்க உள்ளதாகவும் திட்டமிட்டுள்ளனர்.

Conferry India வெளியிட்டுள்ள அறிக்கையின்படி துறை வாரியாக எதிர்பார்க்கப்படும் ஊதிய உயர்வு அதிகரிப்பு

1. ஐடி துறை – 10.5%

2. நுகர்வோர் துறை – 10.1%

3. வாழ்வியல் (Life Science) துறை – 9.5%

4. ஆட்டோ மற்றும் கெமிக்கல் துறை – 9%

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!