தமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் கட்டாயம்? ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை!

0
தமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் கட்டாயம்? ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை!
தமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் கட்டாயம்? ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை!
தமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் கட்டாயம்? ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக கொண்டு வர வேண்டும் என்று கணினி ஆசிரியர் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கணினி அறிவியல் பாடம்:

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலைக்கு பிறகு கடந்த 1ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து 10,12ம் வகுப்புகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. அதிக நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பொதுத்தேர்வுக்குரிய பாடங்களை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. விரைந்து பாடங்களை நடத்த ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. நடப்பு கல்வியாண்டில் கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு HRA உயர்வு, DA 34% ஆக அதிகரிப்பு – அறிவிப்பு எப்போது?

விரைவில் தேர்வு கால அட்டவணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் அரசு பள்ளிகளில் ஆறாவது பாடமாக கணினி அரசியல் பாடத்தை கொண்டு வர கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அரசு கலைத் திட்டத்தில் எவ்வித மாற்றமும் கொண்டு வரப்படவில்லை. இதற்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் சமச்சீர் கல்வியில் கணினி அறிவியல் பாடத்தை கொண்டு வந்தார். ஆனால் அவை முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

அரசு பள்ளியில் கணினி அறிவியல் பாடம் என்பது இன்று வரை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கானல் நீராகவே போய்விட்டது. அதனால் இனி வரும் கல்வியாண்டில் அனைத்து மாணவர்களும் கணினி அறிவியல் பாடத்தை அரசுப் பள்ளியில் ஆறாவது பாடமாக கொண்டு வர வேண்டும் என்று கணினி ஆசிரியர் சங்கத்தினர் அரசை வலியுறுத்தியுள்ளனர். மேலும் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் தோற்றுவித்த நாளாக கொண்டாட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!