2980 பேர் விண்ணப்பித்த கட்டாய கல்வி உரிமை சட்டம் – குலுக்கல் முறையில் இன்று தேர்வு !
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர்கள் பள்ளிகளில் சேர விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்த மாணவர்கள் இன்று குழுக்கள் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாய கல்வி உரிமை சட்டம் :
தமிழகத்தை பொறுத்தவரை கட்டாயக்கல்வி அடிப்படையில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட மாணவர்கள் தனியார் பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள். இந்த சட்டத்தின் அடிப்படையில் தனியார் சுயநிதி பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் எல்.கே.ஜி., நுழைவு நிலை வகுப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வந்தது.
தமிழகத்தில் 1,35,730 புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் நிராகரிப்பு!
இதனை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள 124 பள்ளிகளில் 1,631 இடங்கள் நிரப்பட இருந்தது. அதை தொடர்ந்து 1, 631 இடங்களுக்கு 2, 980 விண்ணப்பங்கள் குவிந்தது. மேலும் ஆகஸ்ட் 13 ம் தேதி வரை பெறப்பட்ட விண்ணப்பங்களை ஏற்கப்படும் என நிர்வாகம் கூறியிருந்தது. வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுனர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் முன்னிலையில் மாணவர் சேர்க்கைக்கான குலுக்கல் இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
அந்தந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான குலுக்கல் காலை 10 மணிக்கு நடைபெறும் எனவும் இதில் பெற்றோர்கள் கலந்து கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்படும் என்றும் முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் முருகன் கூறியுள்ளார். குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் பள்ளிகளில் அனுமதிக்கப்படுவார்கள் என குறிப்பிடப்படுகிறது.