மாநிலத்தில் வரும் 27ம் தேதி அன்று ‘முழு அடைப்பு’ – காரணம் இது தான்! அவதியில் பொதுமக்கள்!

0
மாநிலத்தில் வரும் 27ம் தேதி அன்று 'முழு அடைப்பு' - காரணம் இது தான்! அவதியில் பொதுமக்கள்!
மாநிலத்தில் வரும் 27ம் தேதி அன்று 'முழு அடைப்பு' - காரணம் இது தான்! அவதியில் பொதுமக்கள்!
மாநிலத்தில் வரும் 27ம் தேதி அன்று ‘முழு அடைப்பு’ – காரணம் இது தான்! அவதியில் பொதுமக்கள்!

புதுச்சேரியில் நாடாளுமன்ற உறுப்பினரான ஆ.ராசா என்பவர் இந்துக்களை பற்றி இழிவாக பேசியுள்ளதை கண்டித்து முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இவர் மீது மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

முழு அடைப்பு

புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் நாடாளுமன்ற உறுப்பினரான ஆ.ராசா என்பவர் இந்துக்களை பற்றியும் இந்து மதத்தை பற்றியும் அவதூறாக பரப்புரை செய்து வருகிறார். அதனால் இவர் மீது மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக இந்து முன்னணி புதுச்சேரி மாநிலத்தலைவர் கூறியிருப்பதாவது, இந்து மதத்தை பற்றி பொய்யான பரப்புரையை இந்து விரோத சக்திகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இதில் குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற திமுக கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரான ஆ.ராசா என்பவர் இந்துக்களை பற்றி இழிவாக பேசி உள்ளார். இது இந்து மதத்தினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் போராட்ட உணர்வையும் தூண்டியுள்ளது. மேலும் இது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து தற்போது இந்து முன்னணி அமைப்பினர் சேர்ந்து முழு அடைப்புக்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

செப். 27 மின்தடை ஏற்படும் பகுதிகளின் முழு விவரம் – மின்சார வாரியம் அறிக்கை!

Exams Daily Mobile App Download

அதாவது, இந்து முன்னணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினரான ஆ.ராசாவின் பேச்சை கண்டித்து மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிற 27ம் தேதி அன்று காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை முழு அடைப்பு (பந்த்) போராட்டம் புதுச்சேரியில் நடத்தப்படும் என அறிவித்துள்ளார். மேலும் இதற்கு 32 இந்து சமுதாய அமைப்புகள் ஒத்துழைப்பு தர உள்ளதாகவும் கூறியுள்ளார். பொதுமக்கள், வியாபாரிகள், தொழில் நிறுவனங்கள், போக்குவரத்து சங்கங்கள் உள்ளிட்டவர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!