TNPSCயில் மாதம் ரூ.1,38,500 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க முழு விபரங்கள்!

0
TNPSCயில் மாதம் ரூ.1,38,500 சம்பளத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க முழு விபரங்கள்!
TNPSCயில் மாதம் ரூ.1,38,500 சம்பளத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க முழு விபரங்கள்!
TNPSCயில் மாதம் ரூ.1,38,500 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க முழு விபரங்கள்!

தமிழ்நாடு வனத்தொழில் பழகுநர் பதவியில் உள்ள காலிப்பணியிடங்களில் தகுதியான நபர்களை நியமிக்க உள்ளதாக TNPSC தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பிறகு TNPSC தேர்வு கால அட்டவணையை கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளியிட்டுள்ளது. இதில் குறிப்பிட்டபடி அனைத்து தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெற்று கொண்டிருக்கிறது. இதையடுத்து தற்போது தமிழ்நாடு வனத்தொழில் பழகுநர் பணியிடத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கான தேர்வு டிசம்பர் 3 முதல் 12ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இப்பணிக்கு விண்ணப்பிக்க வனவியல் அல்லது அதற்கு இணையான பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் பொறியியல், இயற்பியல்,வேதியியல், தாவரவியல்,விலங்கியல், புள்ளியியல், கால்நடை மருத்துவயியல், வனவிலங்கு உயிரியல்,விவசாயம், நிலவியல், தோட்டக்கலை உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இப்பணியில் நியமிக்கப்படுபவர்களுக்கு மாத சம்பளமாக ரூ. 37,700 முதல் ரூ. 1,38,500 வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரவாத பென்சன் திட்டம் அறிமுகம் – PFRDA தலைவர் விளக்கம்!

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexams.in என்ற தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இதில் தேர்வுக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். மேலும் நிரந்தர பதிவுக் கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். அத்துடன் ஆதிதிராவிடர்/ஆதிதிராவிடர், பழங்குடியினர், நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள்/ஆதரவற்ற விதவைகள் உள்ளிட்டவர்களுக்கு தேர்வுக் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளையுடன் கால அவகாசம் முடிவடைகிறது. அதனால் தேர்வர்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!