ஆதார் கார்டில் பிரச்சனையா? புகார்களை தெரிவிக்க உங்களுக்கான எளிய வழிமுறைகள் இதோ!

0
ஆதார் கார்டில் பிரச்சனையா? புகார்களை தெரிவிக்க உங்களுக்கான எளிய வழிமுறைகள் இதோ!
ஆதார் கார்டில் பிரச்சனையா? புகார்களை தெரிவிக்க உங்களுக்கான எளிய வழிமுறைகள் இதோ!
ஆதார் கார்டில் பிரச்சனையா? புகார்களை தெரிவிக்க உங்களுக்கான எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் தனி நபரின் அடையாள அட்டைகளில் ஒன்றாக இருக்கும் ஆதார் அட்டையை அனைவரும் வைத்திருக்க வேண்டியது அவசியமானதாகும். ஆதார் சேவை குறித்த பிரச்சனைகளுக்கு புகார் தெரிவிப்பதற்கு UIDAI சில வழிமுறைகளை வழங்கியுள்ளது.

ஆதார்

இந்தியாவில் அனைத்து ஆவணங்களை விட முக்கியமான ஒரு ஆவணமாக ஆதார் அட்டை விளங்குகிறது. மேலும் அரசின் நலத்திட்டங்களும் ஆதார் கார்டு மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதாரில் தங்களின் பெயர், முகவரி, பிறந்த தேதி அல்லது வயது, பாலினம், மொபைல் எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும். மேலும் நீங்கள் ஏதேனும் மாற்றங்களை செய்ய வேண்டுமெனில் இதனை UIDAI அனுமதி அளிக்கிறது. தற்போது ஆதார் கார்டு தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கு UIDAI ஆணையம் சில வழிமுறைகளை வகுத்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

ஆதார் குறித்த புகார்களை தெரிவிக்க 1947 என்கிற இலவச எண்ணை பயன்படுத்தி தொடர்புகொண்டு இதன் மூலமாக புகார்களை தெரிவிக்கலாம்.

PNB வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட் – வட்டி விகிதம் 7.80% உயர்வு.. இன்று முதல் அமல்!

Exams Daily Mobile App Download

 

ஆன்லைன் முறையில் புகார் தெரிவிப்பதற்கான வழிமுறைகள்:

1. இதற்கு முதலில் UIDAI-இன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

2. இதன் முதன்மை பக்கத்திலும் மற்றும் குடியுரிமை போர்ட்டலிலும் இருக்கும் யூஐடிஏஐ சாட்போட்டில் நீங்கள் புகார்களை தெரிவிக்கலாம். உங்களுக்கான தீர்வுகள் உடனடியாக கிடைக்கும்.

3. இந்த சாட்போட்டை பெற நீங்கள் ‘ஆஸ்க் ஆதார்’ எனும் நீல நிற ஐகானைக் கிளிக் செய்ய வேண்டும்.

4. இப்போது ‘புகாரைப் பதிவு செய்’ பிரிவின் கீழ் புகார் அளிக்க வேண்டும்.

5. இதில் 14 இலக்க பதிவு ஐடி, தேதி, பெயர், மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

6. இப்போது Location-ல் நீங்கள் வசிக்கும் கிராமம்/நகரம்/நகரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

7. மேலும் ஆதார் தொடர்பான சந்தேகங்களை கேட்டறிய [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!