விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தை பார்க்க ஊழியர்களுக்கு விடுமுறை அளித்த நிறுவனங்கள் – ரசிகர்கள் உற்சாகம்!

0
விஜய்யின் 'பீஸ்ட்' படத்தை பார்க்க ஊழியர்களுக்கு விடுமுறை அளித்த நிறுவனங்கள் - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யின் 'பீஸ்ட்' படத்தை பார்க்க ஊழியர்களுக்கு விடுமுறை அளித்த நிறுவனங்கள் - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தை பார்க்க ஊழியர்களுக்கு விடுமுறை அளித்த நிறுவனங்கள் – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பீஸ்ட் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. நாளை படம் வெளியாவதால், கொண்டாட்டத்துக்கு இப்போதே தயாராகி வருகின்றனர் விஜய் ரசிகர்கள். மேலும் பீஸ்ட் திரைப்படத்தைக் காண ஊழியர்கள் அதிகம் பேர் விடுமுறை கேட்டதால் படத்தை பார்ப்பதற்கு நாளை விடுமுறை வழங்குவதாக பல நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

பிரபல நிறுவனங்கள் அறிவிப்பு:

நடிகர் விஜய் ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது. இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மீண்டும் ”பாரதி கண்ணம்மா” சீரியலில் என்ட்ரியாகும் வருண் – அனைத்து உண்மைகளும் தெரிய வருமா?

இந்நிலையில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் திரையரங்குகளில் பேனர்கள், கட் அவுட்கள் அமைக்கும் பணியில் ரசிகர்கள் ஈடுபட்டுள்ளனர். இதை அடுத்து மதுரையில் கடந்த 2 நாட்களாக அதிகப்படியான மழை பெய்து வருகிறது, இருப்பினும் ரசிகர்கள் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் சுறுசுறுப்பாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை பீஸ்ட் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், திரைப்படத்தை பார்ப்பதற்காக நிறுவன ஊழியர்கள் ஏராளமானோர் அடுத்தடுத்து விடுமுறை கேட்டு நிறுவனங்களில் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் பீஸ்ட் பட வெளியீட்டுக்கு பல்வேறு நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளன.

சஞ்சீவ் ஆலியாவின் பிரம்மாண்ட வளைகாப்பு நிகழ்ச்சி – வைரலாகும் வீடியோ! குவியும் லைக்குகள்!

மேலும் திருப்பூரில் செயல்படும் நிட்பிரைன் என்ற பின்னலாடை நிறுவனம், சென்னை வேளச்சேரியில் உள்ள ஆரா இன்ஃபோமேட்டிக்ஸ் என்ற மென்பொருள் நிறுவனம், பி ட்ரி உள்ளிட்ட நிறுவனங்கள் நாளை விடுமுறை அறிவித்துள்ளன. மேலும் ஊழியர்களுக்கு நிறுவனங்களே பீஸ்ட் படத்துக்கான டிக்கெட்களை இலவசமாக வழங்கி தம்ஸ்-அப் கூறியுள்ளன. இதனால் பணியாளர்கள் ‘ஜாலியோ ஜிம்கானா’ என இப்போதே பீஸ்ட் திரைப்பட குஷியில் உள்ளனர். இந்நிலையில் ‘பீஸ்ட்’ திரைப்படத்தை குவைத் நாட்டில் வெளியிட அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது .வன்முறை காட்சிகள் மற்றும் தீவிரவாதிகள் தொடர்பான காட்சிகள் அதிகம் உள்ளதால் படத்தை வெளியிட தடை என தகவல் வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here