Common Wealth போட்டிகள் 2022: கடைசி நாளில் இந்தியா 4 தங்க பதக்கம் – முழு பட்டியல் இதோ!

0
Common Wealth போட்டிகள் 2022: கடைசி நாளில் இந்தியா 4 தங்க பதக்கம் - முழு பட்டியல் இதோ!
Common Wealth போட்டிகள் 2022: கடைசி நாளில் இந்தியா 4 தங்க பதக்கம் - முழு பட்டியல் இதோ!
Common Wealth போட்டிகள் 2022: கடைசி நாளில் இந்தியா 4 தங்க பதக்கம் – முழு பட்டியல் இதோ!

2022ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்தது இதில் இந்தியா உள்பட சுமார் 72 நாடுகள் பங்கேற்றது. இதில் கடைசி நாளில் இந்தியா 4 தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

தங்க பதக்கம்:

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2018ம் ஆண்டுக்கு பிறகு 2022ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த ஜூலை 29ம் தேதி தொடங்கியது. இந்தாண்டு போட்டியில் தடகளம், பேட்மிண்டன், ஹாக்கி, குத்துச்சண்டை, பளு தூக்குதல், கிரிக்கெட் உள்ளிட்ட 19 போட்டிகளும், 8 பாரா விளையாட்டுகளும் நடைபெற்றது. முதன் முதலாக இந்த ஆண்டு காமன்வெல்த் போட்டியில் மகளிர் கிரிக்கெட் அணி பங்கு பெற்றது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

இந்த காமன்வெல்த் போட்டியில் இந்திய சார்பாக பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங் ஆகியோர் தேசிய கொடியினை ஏந்தி தலைமை தங்கினார் . இறுதி நாளான நேற்று மகளிருக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி நடைபெற்றது அதில் சிந்து, 21-15, 21-13 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று தங்கம் வென்றார். மேலும் ஆடவருக்கான பேட்மின்டன் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் இந்தியாவின் லக்ஷ்யா சென், 19-21, 21-9, 21-16 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்க பதக்கம் பெற்றார். அடுத்ததாக ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் மற்றும் சிராக் சந்திரசேகர் 21-15, 21-13 என்ற நேர் செட்களில் வென்று தங்க பதக்கம் பெற்றார்.

தமிழகத்தில் 12 & 26 ஆகிய தேதிகளில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் – ஆட்சியர் தகவல்!

அதனை தொடர்ந்து, டேபிள் டென்னிஸ்சில் வீரர் சத்தியன் ஞானசேகரன் வெண்கலப் பதக்கம் பெற்றார். மற்றொரு தமிழக வீரரான சரத் கமல், இறுதிப் போட்டியில் 4-1 என்ற புள்ளிகள் கணக்கில் தங்கம் வென்றார். இந்தாண்டு காமன்வெல்த் போட்டியில் இந்தியா கடைசி நாளில் மட்டும் 4 தங்கம், தலா ஒரு வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றுள்ளது. மொத்தம் 22 தங்கம்,16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களுடன் இந்தியா 4ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!