Common Wealth போட்டிகள் 2022 – கெத்து காட்டும் இந்தியா!

0
Common Wealth போட்டிகள் 2022 - கெத்து காட்டும் இந்தியா!
Common Wealth போட்டிகள் 2022 - கெத்து காட்டும் இந்தியா!
Common Wealth போட்டிகள் 2022 – கெத்து காட்டும் இந்தியா!

இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளது. இதேபோல, டேபிள் டென்னிஸ் தங்கப்பதக்கமும், பேட்மிண்டனில் வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளது.

Commonwealth போட்டிகள்:

இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த காமன்வெல்த் போட்டியில் கலப்பு பேட்மிண்டன் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி சிங்கப்பூரை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் இந்திய அணி மலேசியாவை எதிர்த்து இன்று விளையாடியது. இந்நிலையில், இந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் இந்திய அணி வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது. மலேசிய அணி தங்கப்பதக்கம் வென்றது.

Exams Daily Mobile App Download

இந்த பதக்கத்தையும் சேர்த்து இந்திய அணி 5 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களை வென்று 6-வது இடத்தில் நீடிக்கிறது. இதை தொடர்ந்து காமன்வெல்த் தொடரில் ஆடவர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இறுதி போட்டியில் சரத் கமல் தலைமையிலான இந்திய ஆண்கள் அணி ,சிங்கப்பூரை எதிர்கொண்டது. இந்த போட்டியில் சத்யன் மற்றும் ஹர்மீத் தங்களுடைய ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆட்டங்களில் வெற்றி பெற்றனர். இதனால் இந்திய அணி 3- 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்று அசத்தியது. தங்கம் வென்ற இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 4) மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு

இதை தொடர்ந்து காமன்வெல்த் தொடரில் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவுக்கு மற்றொரு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது. ஆடவருக்கான, 96 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில், இந்திய வீரர் விகாஷ் தாகூர் களமாடினார். இவர், ஸ்னாட்ச் மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் என இரு பிரிவுகளிலும் மொத்தம் 346 கிலோ எடை தூக்கி வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்தினார். காமன்வெல்த் லான் பவுல்ஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்று உள்ளது. அதாவது 4 பேர் கொண்ட மகளிருக்கான லான் பவுல்ஸ் இறுதிப் போட்டியில் இந்தியா – தென்ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

தொடக்கத்தில் இருந்து சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி, ஒரு கட்டத்தில் 8-4 என முன்னிலை பெற்றது. ஆனால், இதையடுத்து பதிலடி கொடுக்கும் வகையில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா 10-க்கு 8 என முந்தியது. இருப்பினும், மனம் தளராமல் ஆடிய இந்திய அணி, 17-10 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை முத்தமிட்டது. காமன்வெல்த்தில் 1930-ம் ஆண்டு முதல் நடத்தப்படும் லான் பவுல்ஸ் போட்டியில், இந்தியா முதல் முறையாக தங்கப்பதக்கத்தை வென்று வரலாறு படைத்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!