விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” முல்லைக்கு நாளை பிறந்தநாள் – CDP ரிலீஸ்! ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் சிறந்த காதல் ஜோடியாக முல்லை, கதிர் ஜோடி இருக்கின்றனர். இந்நிலையில் நாளை (நவ.26) முல்லைக்கு பிறந்தநாள் என்பதால் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முல்லை பிறந்தநாள்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அண்ணன், தம்பி பாசத்தை மையமாக கொண்டு கதை அமைந்துள்ளது. அது மட்டுமில்லாமல் அண்ணன் தம்பிகளில் மனைவிகளும் கூட்டு குடும்பமாக வாழ எந்த அளவிற்கு விட்டுகொடுத்து போவது குறித்து கதை சென்று கொண்டிருக்கிறது. மேலும் கடைசி தம்பி கண்ணனை இன்னும் வீட்டில் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கின்றனர். ஆனாலும் அவருக்கு எதாவது கஷ்டம் என்றால் அண்ணன்கள் தான் முதலில் வந்து நிற்கின்றனர்.
மேலும் இந்த சீரியலில் மக்கள் மனம் கவர்ந்த ஒரு பகுதியாக முல்லை, கதிர் காதல் காட்சிகள் இருக்கிறது. மனதிற்கு பிடிக்காமல் திருமணம் செய்து கொண்ட இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு எப்படி காதலிக்கின்றனர் என்பதை வயதிற்கேற்ற பக்குவத்துடன் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் சென்னை சென்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் தற்போது வீடு திரும்பி உள்ளனர். நாளை (நவ.26) முல்லைக்கு பிறந்தநாள், அதனால் கதிர் என்ன பரிசு கொடுப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – உலகநாயகன் கமல்ஹாசன் தொடர்வாரா?
கடந்த ஆண்டு இதே நாளில் முல்லை பிறந்தநாள் அன்று கதிர் அவருக்கு ஜிமிக்கி கம்மல் பரிசாக கொடுத்தார். மேலும் அவர் புகைப்படம் ஒன்றையும் பரிசாக கொடுத்தார். இந்த ஆண்டு என்ன மாதிரியான சர்ப்ரைஸ் கொடுப்பார். அவருடைய காதலை எப்படி வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். கடந்த ஆண்டு முல்லை கதாபாத்திரத்தில் விஜே சித்ரா நடித்தார். அதனால் முல்லை பிறந்தநாள் அன்று அவரை நினைவுபடுத்தும் விதமாக அவரது போட்டோவை எடிட் செய்து ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.