தமிழகத்தில் தனியார் பேருந்துகளை கண்காணிக்க குழு – தொடர் விடுமுறை எதிரொலி!

0
தமிழகத்தில் தனியார் பேருந்துகளை கண்காணிக்க குழு - தொடர் விடுமுறை எதிரொலி!
தமிழகத்தில் தனியார் பேருந்துகளை கண்காணிக்க குழு - தொடர் விடுமுறை எதிரொலி!
தமிழகத்தில் தனியார் பேருந்துகளை கண்காணிக்க குழு – தொடர் விடுமுறை எதிரொலி!

தமிழகத்தில் விடுமுறை நாட்களை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அதிக அளவில் பேருந்துகளில் பயணிப்பர். இந்த நேரங்களில் கூட்டத்தை பயன்படுத்தி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தது. மாநிலம் முழுவதும் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தொடர் விடுமுறை:

தமிழகத்தில் தொடர் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் வெளியூர்களில் தங்கி பணிபுரிபவர்கள் தங்களுக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல விருப்பப்படுவர். குறிப்பாக பண்டிகை காலத்தில் தங்களது குடும்பத்தாருடன் பண்டிகையை கொண்டாட விரும்புவர். அத்தகைய நேரத்தில் அனைவரும் பேருந்துகளில் பயணம் செய்வர். அதனால் அனைத்து பேருந்துகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதும். இவ்வாறு பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போது பேருந்துகளில் இடம் கிடைக்காது. அதனால் அரசு சார்பாக பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

தற்போது விடுமுறை நாட்களில் அதிக பயணிகள் வரும் போது அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்து வருகிறது. இது பொருளாதார ரீதியாக பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுவதாக கூறுகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை கிருஷ்ணா ஜெயந்தி விழா அரசு விடுமுறை மற்றும் அடுத்த நாள் சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் பொதுமக்கள் அதிகம் பேருந்துகளில் பயணிப்பர். ஏற்கனவே தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து 2வது வரமாக புகார்கள் வந்துள்ளது.

தமிழகத்தில் விரைவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா – அமைச்சர் பேட்டி!

Exams Daily Mobile App Download

அதனால் தனியார் பேருந்துகளை கண்காணிக்க மாநிலம் முழுவதும் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு விதிமீறல்களுக்காக ஆம்னி பேருந்துகளில் இருந்து ரூ.11.04 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இனி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகளிடமிருந்து புகார் வந்தால் சம்பந்தப்பட்ட பேருந்துகள் கூடுதல் கட்டணத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!