விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் சன்டிவி ‘ரோஜா’ வரை – ஹிட் சீரியல்களின் டாப் கமெண்ட்ஸ்கள்!

0
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் சன்டிவி ‘ரோஜா’ வரை – ஹிட் சீரியல்களின் டாப் கமெண்ட்ஸ்கள்!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் சன்டிவி ‘ரோஜா’ வரை – ஹிட் சீரியல்களின் டாப் கமெண்ட்ஸ்கள்!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் சன்டிவி ‘ரோஜா’ வரை – ஹிட் சீரியல்களின் டாப் கமெண்ட்ஸ்கள்!

தமிழ் மொழியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சில முன்னணி சீரியல்களின் இந்த நாளுக்கான ப்ரோமோக்கள் மற்றும் அதன் மீதான ரசிகர்களின் பார்வை மற்றும் கருத்துக்கள் குறித்த விவரங்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களின் கமெண்டுகள்:

முன்பெல்லாம் வீடுகளில் இருக்கும் குடும்ப பெண்களின் பொழுதுபோக்கு தான் சீரியல் என கருதப்பட்டு வந்தது. ஆனால் இன்றைய காலத்தில் குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைவரும் சீரியல் பார்க்க துவங்கியுள்ளனர். அந்த வகையில் வாரம் முழுவதும் ஒளிபரப்பப்படும் பல்வேறு சீரியல்களுக்கு, ஒவ்வொரு நாளும் ப்ரோமோ என்ற அந்த வாரத்துக்கான சுருக்கமான கதைக்களம் வெளியாகும்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனத்திற்கு பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? வெளியான ட்விஸ்ட்!

அப்படி வெளியிடப்படும் ப்ரோமோக்கள் தான் ரசிகர்களை சீரியல் பார்க்க வைக்க தூண்டுகிறது. அந்த வகையில், டாப் சீரியல்களுக்கு ரசிகர்களின் கருத்துக்கள் என்ன என்பதை இந்த பதிவில் காண்போம்.

பாரதி கண்ணம்மா:

வெகு நாட்கள் களைத்து பாரதியும், கண்ணம்மாவும் நேருக்கு நேர் பேசுவது போல் காட்சிங்கள் வந்துள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கண்ணம்மா சொல்வது பாரதி நம்ப மாட்டா என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் பாரதி மாமாவோட பேசணும் என்று சொன்னவுடன் பாரதி முகத்தில் வந்த சிரிப்பு அருமை என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இது ஒரு நெகிழ்வான தருணமாக இருக்கும் பார்க்கவே சூப்பரா இருக்கு என கூறியுள்ளார். கண்ணம்மா உடைய தாய்மை நடிப்பு சூப்பர் சூப்பர் என ஒரு ரசிகர் கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இந்த ப்ரமோ குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

முல்லை மூர்த்தி, கதிர், ஜீவா இவர்களுக்கு மதிய சாப்பாட்டை எடுத்து வந்து கொடுப்பது போல் காட்சிகள் ப்ரோமோவில் உள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் குடும்பத்தில் என்ன ஒற்றுமை நல்லது என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் அப்போ எல்லாருக்கும் ஒன்னா சமைக்கலயா தனித்தனியாதான் சமைச்சிங்களா என்று கேட்டுள்ளார்.

சின்னத்திரை நடிகராக ஜெயித்த ‘செம்பருத்தி’ சீரியல் விஜே அக்னி – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

மேலும் ஒரு ரசிகர் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படியே போய்க்கிட்டு இருப்பீங்க கதைக்கு வாங்க பாண்டியன் ஸ்டோர்ஸ் என்று கூறியுள்ளார்.

ராஜா ராணி 2:

குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இணைத்து படம் பார்க்க சினிமா தியேட்டர் செல்வது போல் காட்சிகள் உள்ளது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பரவாயில்லையே இவ்வளவு நாள் சண்டை இப்போ ரொமான்சா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் நேற்று உங்க செந்தில் அர்ச்சனா படத்துக்கு போனாங்க இன்னைக்கு நீங்களா என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இப்படியோ கலகலப்பா கொண்டுபோனா நல்லாருக்கும் என்றே கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

ரோஜா:

இன்றைய ரோஜா சீரியலின் ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பிர்யா ஆட்டம் கூடிய விரைவில் முடிய வேண்டும் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இனி ரோஜா பூஜா காம்பினேஷன் சூப்பர் தான்.அனு பாவம் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் சரஸ்வதி அல்ல அது செண்பகம் தான் என்று அர்ஜுனனுக்கு தெரிய வேண்டும் என கூறியுள்ளார். அனு நல்லா ஆனவுடன் ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என்று சொன்ன கோர்ட் உத்தரவு என்ன ஆச்சு? என ஒரு ரசிகர் கேட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!